Sunday, October 10, 2010

நவராத்திரி வழிபாடு

Friday, October 08, 2010

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள் :-
           சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிபடுத்தவே ஆகும். மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
             முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

கொலு பொம்மையின் தத்துவம்

நவராத்திரி கொலு.


                      நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

இன்று நவராத்திரி.

 பூவுலகைக் காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனாம் சிவனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அது நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.
பொதுவாக பூஜைகளை பகல் நேரங்களிலேயே மேற்கொள்வார்கள். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகளை செய்கிறோம்.

Thursday, September 30, 2010

புரட்டாதிச் சனிவிரதம்


"புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 18ம் திகதி (18.09.2010)  முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகளுடன் (செப்ரெம்பர் 25, ஒக்ரோபர் 02, 09, 16) ஐந்து புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.

Monday, September 27, 2010

கோளறு பதிகம்.


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.



நவகிரக தோத்திரம்


சனி காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே!
சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
சனீஸ்வரன் தோத்திரம்:

சனீஸ்வர விரதம்

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. 

கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம்.

புரட்டாதிச் சனி

புரட்டாதி மாதச் சனிக்கிழமையை முன்னிட்டு  ஏராளமானவர்கள் கோயிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை விளக்கு ஏற்றியும் நீல நிறப்பூக்களால் அர்ச்சனை செய்தும் சனிதோஷ நிவர்த்திக்காக விரதமிருந்தும் வழிபாடாற்றி வருவதைக் காணமுடிகிறது. இதனை யொட்டி அரசகேசரி வினாயகப்பெருமான் கோவிலிலும் வளக்கம்போல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

Thursday, September 23, 2010

தீர்த்தோற்ஸவம்



நீர்வை அரசகேசரிப் பெருமானின் தீர்த்தோத்ஸவம் இன்று மதியம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

'ஆர்த்த பிறவித் துயர் கெட
 ஆர்த்தாடுத்தாடும் தீர்த்தன்'

 என்று திருவாசகம் பேசும் சிவபெருமானின் திருக்குமாரர்களான முருகனும் விநாயகரும் தீர்த்தக் க்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த வாரி கண்டருளினர். தொடர்ந்து மஹா யாகதரிஸனம், ஹாபூர் ணாஹதி, யாககும்பாபிஷேகமும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ்விழா பிற்பகல் 2.30மணி யளவில் அன்னதானத்துடன் நிறைவு பெற்றது.


Wednesday, September 22, 2010

அழகு இரதமேறி வந்தான்'

அழகு இரதமேறி வந்தான், அருட்காட்சி தந்து நின்றான்.!
அரசகேசரிப்பிள்ளையாரின் தேர்த்திருவிழாவான இன்று பஞ்சமுக வினாயகர் தம்பி முருகப்பெருமான் சமேதரராக காலை ஆறு மணிக்கு வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பித்து ஈழத்தின் தலை சிறந்த தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களின் இசை மழை பொழிய கற்பூர தீபாராதனையுடனும், சாம்பிராணி வாசனை அடியவரின் உள்ளத்துட்புகுந்து பக்திப்பரவசமூட்ட, கொடி, குடை ஆலவட்டம் மற்றும் தீப்பந்தங்கள் அணிவகுக்க ஓதுவார், தேவார, திருவாசக, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் முதலான பஞ்சபுராண பாரணங்களை ஓத மற்றும் பல அடியார்களின் அங்கப்பிரதட்டை பின்தொடர அந்தணச்சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓத உள்வீதி வலம் வந்து நீர்வைமண்ணிலே கிடைக்கப்பெற்ற அனைத்துப் பூக்களாலும் பூமழை சொரிய சூரிய பகவான் தனது வெங்கதிர்களை அடக்கி இயற்கை கூட தேரோட்டம் சிறக்க ஆசீர்வாதம் புரிய வெளிவீதியிலிறங்கிய பெருமான் சரியாக எட்டு முப்பது மணிக்கு அழகிய சித்திரத்தேரிலேறி அழித்தல் தொழிலுக்கு ஆயத்தமானார்.

Tuesday, September 21, 2010

ஒப்பற்ற அழகுறை சப்பறப்பவனியிலே..!


அரசகேசரியானின் மகோற்சவத் திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவான இன்று ஆனைமுகனும், ஆறுமுகனும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டுச்சப்பறத்திலே மின்குமிழ்களின் வர்ண ஒளிவெள்ளத்துள் வீதியுலாவந்து அடியவர்களிற்கு அருட்காட்சி தருகின்ற கண்கொள்ளாக்காட்சி..


Monday, September 20, 2010

புரவியேறிப்புறப்பட்ட பார்வதி மைந்தர்கள்

                                         விக்கினங்கள் களைய புரவியேறிப்புறப்பட்ட பார்வதி மைந்தர்களின் வேட்டைக்கோலம்.

அரசகேசரியானின் எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவிற்கென சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வினாயகனும் தம்பி முருகப்பெருமானும் சிவப்பு வர்ணம் பூசப்பெற்ற குதிரைகளிலேறி அடியவர்களின் பாவங்களையும் அவர்களைப் பீடித்துள்ள தீங்குகளையும் வேட்டையாட விளைந்த அருட்கோலம்...! 


Sunday, September 19, 2010

ஏழாந்திருவிழாவில்!

எருதேறி எழில்பொங்க ஏழாந்திருவிழாவில் அண்ணனும் தம்பியும்.




ஆறாந்திருவிழாவில் அரசகேசரியான்..

ஆறாந்திருவிழாவில் ஆறுமுகன் சமேதரராக அருள்பாலிக்கும் அரசகேசரியான்..

ஐந்தாம் நாளில் அருட்கோலம்..

ஐந்தாம் நாளில் அரசகேசரியானின் அருட்கோலம்..

Thursday, September 16, 2010

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா

நீர்வேலி அரசகேசரித்தலத்தில் எழுந்தருளியுள்ள பாலாம்பிகை உடனாய
வைத்தியநாதப்பெருமான் ஆவணி மூலநாளாகிய இன்று மதியம்





4ம்திருவிழாக் கோலாகலம்

4ம்திருவிழாக் கோலாகலம்- விசேட தவில் இன்னிசைக்கச்சேரி
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயிலில் இன்று காலை 4ம்திருவிழாக்
கோலாகலமாக விசேட தவில் இன்னிசைக்கச்சேரியுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாள்

நீர்வை அரசகேசரிப்பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாளாகிய நேற்றைய தினம் இரவு பிள்ளையார் யானைவாகனத்திலும் குமரன் இடபவாகனத்திலும் காட்சி தந்ததை இங்கு காணலாம். மங்கல வாத்திய கோஷ்டியினருள் சிலர் இசையாராதனை செய்வதும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தகவல்- 
தி.மயூரசர்மா

நீர்வையூர் மக்கள் கொண்டாட்டம்

அரசகேசரி விநாயகப்பெருமானுக்கு நேற்று மதியம் தொடக்கம் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் நேற்று மாலை நவசந்தி ஆவாஹனம் இடம்பெற்றது. விநாயகர் மூஷிக வாகனத்திலும் முருகன் மயில் வாகனத்திலும் பவனி வந்து அருட்காட்சி வழங்கினர். இன்றைய தினமும் காலை உத்ஸவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

Wednesday, September 15, 2010

கொடி ஏற்றத்திருவிழா

அரச கேசரிப்பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இம்மாதம் 13ஆந் திகதி திரு.சோமதேவக்குருக்கள் தலைமையில் யாழ் நகரின் புகழ்பூத்த அந்தணச்சிவாச்சாரியார்கள் பிரசன்னத்தில் வேதாகம முறைப்படி மிகவும் பக்திபூர்வமாக பலநூறு அடியாரகளின் அரோகரா ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் மதியம் மற்றும் இரவுப் பூஜைகளிடம்பெற்று 21ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 22ஆம் திகதி பூரணை தினத்தன்று தீர்த்தத்திருவிழாவும் மாலை கொடியிறக்கத்திருவிழாவுடன் மகோற்வ்சவம் இனிதே நிறைவுறும்.

Friday, August 27, 2010

மஹாகணபதி ஹோமம்


நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அரசகேசரி விநாயகர் திருக்கோயிலில் எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை காலை 7மணி தொட்டு மஹாகணபதி ஹோம வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் விநாயகசதுர்த்திக்கு முந்தைய ‘மஹாசங்கடஹர சதுர்த்தி’ நன்நாளில் இந்த ஹோமம் வருடாந்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இந்த வகையில் இவ்வாண்டும் செப்டம்பர் 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள வருடாந்த மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக இந்த ஹோம வைபவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Friday, August 20, 2010

மகோற்சவத்தை ஒட்டிய ஆயத்தங்கள்.

அடுத்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய வெளிமண்டபச் சுவர்கள், யன்னல் கம்பிகள் மற்றும் வாயில் அடைப்பு (கேற்) என்பவற்றிற்குத் தீந்தை (பெயின்ற்) பூசப்பட்டு வருகின்றது. இதே நேரம் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் ஆலயக் குருக்கள் தேவர் ஐயாவின் மகன் ஜெயன் ஐயாவின் முயற்சியில் நூல் ஒன்றும் தொகுக்கப்பட்டு வருகின்றது. 

Sunday, August 15, 2010

ஆலயச்சிறப்புமிக்க நீர்வேலி

ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது.

Friday, August 13, 2010

சங்காபிஷேக விழா.

நீர்வை அரசகேசரித் தல வைத்தீஸ்வரப் பெருமானுக்கு
சங்காபிஷேக விழா.


நீர்வேலி அரசகேசரித் திருத்தலம் மூன்று கருவறைகளை (மூலஸ்தானங்களை) உடையது. ஓன்று பிள்ளையாருக்குரியது. இப்பெயரிலேயே ஆலயமும் அழைக்கப்படுகின்றது. மற்றைய முக்கிய மூலஸ்தானம் வைத்தீஸ்வரப் பெருமானுக்குரியது. வைத்திய நாதன் என்ற திருநாமத்துடன் சிவப்பரம்பொருள் இலிங்க வடிவில் இங்கு காட்சி தருகிறார்.
 


Wednesday, August 11, 2010

வரலட்சுமி விரதம் என்றால் என்ன?

 தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் நாளைவரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

வரலட்சுமி விரதம்

அறிவித்தல்
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படவிருக்கிறது. நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் விரதம் அனுட்டிக்கவிரும்புவோர் ரூபா 200 செலுத்தி பெட்டிக் காப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 15.08.2010 இற்கு முன்னர் ஆலய குருக்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Sunday, August 08, 2010

NEERVELY ARASAKESARI TEMPLE


Neervely Arasakesari Temple is situated about North of 8 k.m post on the Jaffna- point pedro road. The temple must has been built by “Arasakesari”. The minister of Jaffna kingdom.

Pararajasekaran is a main king of Jaffna kingdom. (1478-1519). He was a successful king of Jaffna. (kingdom- Nallur) The Pararajasekar king’s Brother Segarajasekaran.  Arasakesari a Nephew of the king was an Sanskrit scholar who translated  “kaviraj” Kalidasa’s sanskrit classic entitled “Raguvamsam” in to tamil.

Wednesday, August 04, 2010

சமய மெய்நெறி நோக்கிய ஒரு பார்வை

கிறிஸ்தவம் என்பது இது அல்லவா?

 இன்றைக்கு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு மதப்பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் இந்து மதத்தினைப் பற்றி பலவாறான அவதூறுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்துமத்தில் உள்ள பல்வேறு கிரியை மரபுகளை தவறானது என்றும் மூடத்தனமானது என்றும் கூறி தமது வழிபாட்டுமறைமையே மேன்மை மிக்கது என்று பட்டி தொட்டி எங்கும் பிரசங்கித்து வருகின்றார்கள். தெற்காசிய தேசமெங்கும் இந்துக்களைக் குறிவைத்து மதப்பிரச்சாரம் செய்து வருவதைத் தவிர மேற்குலக நாடுகளில் சென்று வாழும் இந்துக்களின் வீடுகள் தேடி வந்தம் இவர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Sunday, August 01, 2010

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்


1. விநாயகர் துதி

ஒற்றைக் கொம்பும் செந்நிற மேனியும்
 ஒளிரும் யானைத்திருமுகமும் பாசாங்குசமும்
வற்றாக் கருணைவளர் சிற்றடிகளும்
 வரதகரமும் உடைய நின்னை வாழ்த்தும்
நற்றமிழ் பிள்ளைக் கவி தழைத்தே
 நலமுற விளங்கிடவே கஜமுகனைச்
செற்றவனே நீர்வை அரசகேசரியாய்
 செம்மை வரந்தந்து காத்திடுவாயே

Thursday, May 06, 2010

புதிய நுழைவாயிற் கதவு

அரசகேசரிப் பிள்ளையாருக்குப் கோவில் -புதிய நுழைவாயிற் கதவு

கோவில் கோபுர மண்டபத்திற்கு வெளியே மரத்தினால் ஆன சட்டப்படல் அமைக்கப்பட்டுக் கதவு காணப்பட்டது. தற்போது இக்கதவு அகற்றப்பட்டு இரும்பினால் ஆன கிறில் கதவு அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.






தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
 

கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப் படிப்புத் தற்போது இடம்பெற்றுவருகின்றது. அதில் தற்போது தட்ச காண்டப் படிப்பு இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27.05.2010 வியாழக்கிழமை வைகாசி விசாக தினத்தன்று கந்தபுராணப்படிப்புப் பூர்த்தியாகும். அன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படும். கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. உற்பத்திக் காண்டம்இ அசுர காண்டம்இ மகேந்திர காண்டம்இ யுத்த காண்டம்இ தேவ காண்டம்இ தட்ச காண்டம் என்பனவே அவையாகும்.

Thursday, April 22, 2010

நீர்வேலிக்குப் பெருமை


இரகு வம்சத்தையும் தேடிப் பதிப்பிப்பது நீர்வேலிக்குப் பெருமை
      இரகுவம்சம் கடினமான தமிழில் ஆக்கப்பட்டது. எங்கோ ஒரு சில நூலகங்களில் இருப்பதாகத் தகவல். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ கணேசையர் 50 ஆண்டுகளுக்கு முன் பொருளோடு பதிப்பித்ததாகவும் வாசித்திருக்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கோயிலில் நடந்த விழாவில் ; நீர்வை முருகையன் “ அரசகேசரி இங்கிருந்து தான் இரகுவம்சம் எழுதியிருக்க வேண்டும். எனவே இது பற்றி ஆய்வு நிகழவேண்டும். இதனால் தான் செம்- பாட்டு பிள்ளையார் ( செம்மையான நல்ல பாட்டுக்கள் எழுந்த இடம்) என்று ஆகியிருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தமையும் ஞாபகமிருக்கிறது.

சிலை அமைப்பது சிறப்பு


அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைப்பது சிறப்பு

            15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனும் தமிழில் “இரகுவம்சம்” என்ற பெரிய அரிய இன்று எம் கைகளுக்கு அகப்படாத காவியத்தை படைத்தவனும் நீர்வேலியில் அரசகேசரிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டியவனும் யாழ்ப்பாண ராச்சியத்தில் மந்திரிப்பதவி வகித்தவனுமாகிய அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைய வேண்டும் எனப் பெரியோர் விரும்புகின்றனர். சென்ற வாரம் மேற்படி கோயில் தொடர்பாக உதயன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது.

புனிதம் பேணப்பட வேண்டும்


அரசகேசரியான் ஆலயச் சூழலில் புனிதம் பேணப்பட வேண்டும்

               அரசகேசரியான் ஆலயச் சூழலில் புனிதம் பேணப்பட வேண்டும் என்பது எல்லோரினதும் அவா. மண்ணின் மகிமையினை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான சூழமைவை யாவரும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.










தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு


அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு

               அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பாதுகாப்புக் கருதியும் இரவில் திறந்திருந்த கோபுர மண்டபத்தில் வேண்டாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவுமே இக்கதவு பொருத்தப்பட்டுள்ளது

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

Saturday, April 17, 2010

உரும்பிராயில் ராமகிருஷ்ணமிஷனின் கிளை.

ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று உரும்பிராயில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ராமகிருஷ்ணபரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர், ,தூயஅன்னை சாரதாதேவி ஆகியோரது கொள்கைகளை பரப்புவதையும் ஆன்மீகப்பணியாற்றுவதையும் மக்கள் சேவை செய்வதையும் இலக்காகக் கொண்ட தூயதுறவிகளை தன்னகத்தே கொண்டு பணியாற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள   மாபெரும் ஆன்மீக இயக்கமாகிய ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று நீர்வேலிக்கு அருகிலுள்ள உரும்பிராயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உதயன் பத்திரிகையில் ஆலயம் பற்றிய செய்தி.

உதயன் பத்திரிகையில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றிய செய்தி.


உதயன் பத்திரிகையில் இன்று வியாழக்கிழமை (15.04.2010) இடம்பெற்ற வலி.கிழக்கு வலம் பகுதியில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றி அழகனான கட:டுரை ஒன்று ஞான சூரியன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.      சென்ற புதன்கிழமையும் மேற்படி ஆலயம் தொடர்பான அற்புதத் தகவல்களையும் அரிய செய்திகளையும் உள்ளடக்கி கட்டுரை வந்திருந்தது. அதன் தொடர்ச்சியை இதுவாகும்..
தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
                                                 

 

Tuesday, March 30, 2010

பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.. வேறு எங்குமில்லாத வகையில், மேற்படி பல்கலைக்கழகம் ஒரு அரச நிறுவனமாக, இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் இங்கு பட்டமளிப்பு விழா தோரணங்கள், மாவிலைகள், வாகைமாலைகள், நந்திக்கொடிகள் கட்டப்பெற்று கோலங்கள் வரையப்பெற்று நிகழ்வது வழமை.

Sunday, March 28, 2010

பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழா  26.03.2010,  27.03.2010, நாளை மறுதினம் 28.03.2010 ஆகிய நாட்களில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 2005 ஓக்டோபரில் 24 ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. இதன்பின் நாட்டுச் சூழல் காரணமாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவில்லை.

காலத்தின் தேவை...


“இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப பல்துறைப்பட்ட தகுதியும் திறமையும் உடையவர்களாக மாறவேண்டும்”; பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை

 இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப தங்களை தகுதியும் திறமையும் பொருந்தியவர்களாக மாற்றிக் கொண்டு நமது சமூகத்தை வழிகாட்டுபவர்களாகத் திகழ வேண்டும் என்று தரிவித்தார் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையப் பணிப்பாளருமான பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை.
 

Saturday, March 20, 2010

ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலையின் ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழலில் அமைவு பெற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக இயங்கும் ஸ்ரீகணேசா அறநெறிப்பாடசாலையின் விழாவும் பரிசளிப்பு வைபவமும் வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2010) அன்று பிற்பகல் 1.30க்கு பாடசாலை முதல்வர் ஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Wednesday, March 17, 2010

சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, March 11, 2010

அறிந்து கொள்வோம்...

அறிந்து கொள்வோம் நம் ஆன்மீகத்தலைவர்களை….
    செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்
                                 

                        ஒரு சில கசப்பான சம்பவங்களையடுத்து இந்துக் குருமார்கள், இந்துத்துறவிகள் மீது கண்டபடி குற்றம் சுமத்த இந்துவிரோதிகளும்  மதமாற்றச் சக்திகளும் மதங்களுக்கு எதிரான நாத்தீகவாதிகள் சிலரும் வருமானத்தையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்களைச் சேர்ந்த சிலரும் தமிழகத்திலும் இலங்கையிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, March 09, 2010

இந்துக்கள் இன்றைய நிலையில்….


சென்ற வாரம் உலகெங்கும் வாழும் இந்துக்களிடையே பாhpய உணா;வலைகளை ஏற்படுத்தி வேதனைக்குhpய எண்ணப்பாங்குகளை விதைத்துச் சென்றிருக்கிறது.
      
       இந்த வேதனைக்குhpய இந்துத்தலைவா;கள் என்று மக்களால் மதிக்கப்பட்டவா;களின் கூத்துக்கள் பற்றிய உண்மையோஇ பொய்யோ செய்திகள் இன்னமும் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

Friday, February 12, 2010

பரந்த அறப்பணி நடைபெறும் ஆலயச்சூழல்

பரந்த அறப்பணி நடைபெறும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல்
              
       நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல் இயல்பாகவே சமூகப்பணி நடைபெறும் சூழமைவுடையதாகவுள்ளது. கி.பி 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் பரம்பரைத் தோன்றலான இரகுவம்ச மகாகாவியத்தைத் தமிழில் படைத்த அரசகேசரி மகாமந்திரியால் ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடையதாக இவ்வாலயமுள்ளது. இப்பழமையும் அருட்சிறப்பும் மிகுந்த இவ்வாலயச் சூழல் இயல்பாகவே தெய்வீகத் தன்மையுடன் சமூகப்பணிகள் நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.                                                                                                                

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை