Sunday, March 28, 2010

காலத்தின் தேவை...


“இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப பல்துறைப்பட்ட தகுதியும் திறமையும் உடையவர்களாக மாறவேண்டும்”; பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை

 இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப தங்களை தகுதியும் திறமையும் பொருந்தியவர்களாக மாற்றிக் கொண்டு நமது சமூகத்தை வழிகாட்டுபவர்களாகத் திகழ வேண்டும் என்று தரிவித்தார் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையப் பணிப்பாளருமான பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை.
 


அண்மையில் யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்றுகூடலும் வேதாகமப்பரீட்சையில் சித்திபெற்றோருக்கான சான்றிதழ் வழங்கலும் கௌரவிப்பும் இடம்பெற்ற போதே பேராசிரியர்இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்

ஒரு அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு நமது சமயத்தின் சார்பில் சர்வதேச அரங்கில் பேசவல்லவர்களாகவும் சிறந்த கல்வியறிவும் ஆளுமையும் உடையவர்களாகவும் இந்துக்குருமார்கள் திகழ வேண்டும். என்றும் அவர்ததெரிவித்தார்.

பிரம்மஸ்ரீ.ப.மனோகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ப.சிவானந்தசர்மா வரவேற்புரையாற்றினார். யாழ்.வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.வேதநாயகம் சிரேஷ்டசட்டத்தரணி தவபாலன் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபர் ஆறு.திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிரேஸ்ட குருமாரான பிரம்மஸ்ரீ .ஜ.மஹேஸ்வரக்குருக்கள் தாணு.மஹாதேவக்குருக்கள் யாழ்.பல்கலைக்கழக இந்துநாகாPகத்துறைப் பேராசிரியர்.ம.வேதநாதன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஏராளமான குருமார்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புதிதாக சட்டத்தரணியாக பதவியேற்ற ஜோதீந்திரக்குருக்கள் சிவராமசர்மாவும் பதவியுயர்வு பெற்ற உதவிப்பதிவாளர் நாயகம் பிரம்மஸ்ரீ.சதாசிவஐயர் அவர்களும் கௌரவிக்கப்பட்டனார். சென்ற மாதம் இடம்பெற்ற வேதாகமப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவார்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட பலராலும் உலகளாவியரீதியில் இந்து மதத்தின் இன்றைய நிலை பற்றிப் பலவாறான கருத்துக்கள் வழங்கப்பட்டது. உலகத்தில் நமது மதத்திற்கு ஏற்பட்டு வரும் பலவித நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்பதும் பிற மத குருமார்களுக்கு நிகராக இந்துக்குருமார்களும் தம்மைப்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும் என்பதுமாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.

மேற்படி குருகுலமானது சென்ற 2001ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வேதம் ஆகமம் ஜோதிஷம் முதலிய ஆன்மீக குருத்துவக்கல்வி மட்டுமல்லாது ஆங்கிலம் சிங்களம் கணனி என்பனவும் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்துக்கள் என்ற வகையில் வெறுமனே கோயில் பூசை வழிபாடுகளுடன் நின்று விடாமல் இன்னும் இவைகளைப் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும். குட்டுப்படுவதும் ஊடகங்களால் கேட்பாரின்றி விமர்சிக்கப்படுவதும் தான் இந்துக்களின் நிலையல்ல… எவ்வளவு நாள் தூங்கிக் கிடப்பது? வீரவிவேகானந்தனாய் வீரமுழக்கம் செய்ய வேண்டிய காலம் இது.

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை