Saturday, March 20, 2010

ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலையின் ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழலில் அமைவு பெற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக இயங்கும் ஸ்ரீகணேசா அறநெறிப்பாடசாலையின் விழாவும் பரிசளிப்பு வைபவமும் வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2010) அன்று பிற்பகல் 1.30க்கு பாடசாலை முதல்வர் ஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

                    இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கோப்பாய் ஆசிhpய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் திரு.த.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்வார்.

                   சிறப்பு விருந்தினர்களாக வலி.கிழக்குப்பிரதேச செயலர் த.நடராசாவும் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் முதல்வர் இ.குணநாதனும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் யாழ்.சமூக அபிவிருத்தி மன்றத்தைச் சேர்ந்த திருமதி.நவநீதன் ஜெகதீசனும் அரசகேசரிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்த க.முருகையா மற்றும்  ர.தியாகராசா ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

                     அரசகேசாpப்பிள்ளையார் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சிகளில் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.சா.சோமதேவக்குருக்கள் ஆசியுரை வழங்குவார். பாடசாலை ஆசிரியை செ.சிவாஜினி வரவேற்புரையை நிகழ்த்துவர். தொடர்ந்து தலைமையுரை சிறப்பு விருந்தினர்கள் உரை மற்றும் பிரதமவிருந்தினர் உரையும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

                    ஞாயிறுப் பாடசாலையாக சமயக்கல்வியைப் போதித்து அறநெறி வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் அரிய கைங்கரியத்தை இப்பாடசாலை ஆற்றி வருகின்றது.

                                         
தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
                                                                      

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை