சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்யானந்தா விவகாரத்தைத் தொடர்ந்து, கல்கி ஆசிரமம் குறித்தும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பாகக்கூட பல்வேறு காலகட்டங்களில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட சாமியார்கள் குறித்து சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
திருவள்ளுவர் காலத்திலேயே இத்தகைய போலிச் சாமியார்கள் இருந்த காரணத்தினால்தான், அவர் "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்'-என்கிற குறட்பாவை இயற்றியுள்ளார்.
பொதுவாக, சாமியார்கள் என்று சொன்னால், துறவிகள் என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள். ஓர் இடத்தில் நில்லாமல், பல இடங்களுக்குச் சுற்றித் திரிந்து, ஆன்மிக அனுபவம் பெறுபவர்களை சந்யாசிகள் என்பர். பந்தபாசங்களைத் துறந்து, பற்றற்ற நிலையில் இருப்பவரைத் துறவி என்பர்.மி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
பிற மதங்களிலும் இத்தகைய போலிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த செய்திகளையோ, படக்காட்சிகளையோ ஒளிபரப்புவதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. நடந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நியாயம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்.பிற மதங்களிலும் இத்தகைய போலிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த செய்திகளையோ, படக்காட்சிகளையோ ஒளிபரப்புவதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. நடந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நியாயம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்
நித்யானந்தாவை இந்து சமய உணர்வாளர்களே கண்டிக்கின்றனர். அதே நேரத்தில் தமிழக முதல்வரே கண்டிக்கும் அளவுக்கு ஆபாசக் காட்சிகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
நீர்வை மயூரகிரி.