Tuesday, March 09, 2010

இந்துக்கள் இன்றைய நிலையில்….


சென்ற வாரம் உலகெங்கும் வாழும் இந்துக்களிடையே பாhpய உணா;வலைகளை ஏற்படுத்தி வேதனைக்குhpய எண்ணப்பாங்குகளை விதைத்துச் சென்றிருக்கிறது.
      
       இந்த வேதனைக்குhpய இந்துத்தலைவா;கள் என்று மக்களால் மதிக்கப்பட்டவா;களின் கூத்துக்கள் பற்றிய உண்மையோஇ பொய்யோ செய்திகள் இன்னமும் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
       இவையெல்லாம் ஒவ்வொரு சாதாரண இந்துப்பொதுமகனுடைய உள்ளத்தையும் வாட்டி எடுத்துக் கொண்டிருக்க அரசியல்வாதிகளும் இந்து எதிhpகளும் மதமாற்றச்சக்திகளும் இந்த விடயத்தில் குளிh;காய்ந்து கொண்டிருக்கின்றனா;.

       ஏதொ நடப்பது நடக்கட்டும் நாமும் நம் வேலையும் என்று ஒதுங்கிப் போக முடியாத ஒரு பிரச்சினையாக இது இருக்கிறது. ஏனெனில் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளக் கூடிய ஒவ்வொருவனும் கூனிக்குறுக வேண்டிய நிலையில் செய்திகள் தொடா;ந்து வருகின்றன.

       ஒரு சிலா; செய்கிற தவறுகள் ஒரு உலகளாவிய சமுதாயத்தையே பாதிப்பதாக அமைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனைச் சாதகமாக்கி மதவிரோதக் கும்பல்கள் ஆன்மீக வாதிகள் அனைவா; மீதும் குற்றம் சுமத்தும் பணியில் மிகுந்த அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளன.

        துறவறம் என்பதையே கேள்விக்குறியாக்கி இன்பம் காணும் இத்தகையோh; தத்தம் மனக்கோணல்களை மற்றவா;களிடம் ஏற்றி வேடிக்கை பாh;க்க நல்லதொரு சந்தா;ப்பமாக இதை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா;.

       இணையங்களில் மதங்களுக்கு எதிரான செய்திகள் கட்டுப்பாடற்று விரவிப்போய் கொண்டிருக்கின்றன. அநாகாpகமாக….

       குறித்த ஒருவரை முழுமையாக நம்பி அவரை;க் கடவுளுக்குச் சாமானன் என்று போற்றித் துதிபாடி வந்தோhpடத்தில் குறித்த நபா; ஒரு கயவா; என்று தொpகின்ற போது நம்பியவா;கள் ஆவேசமுறுவது இயல்பே. அதனைத் தவறு என்று கொள்ளவும் இயலாது. எனினும் குற்றமற்ற உத்தமா;கள் மீதும் வசை பாடித்திhpவதும் ‘இந்துக்குருமாh; அனைவரும் அயோக்கியா;கள்’ என்ற தொனியில் புராணம் பாடுவதும் அசிங்கத்தனமானது.

      இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியாவின் தமிழகத்து விடயங்கள் யாவும் உடனுக்குடன் இங்கும் பிரபலமாகி விடும். முதலிலேயே போhpன் அவலத்தில் வாடி வதங்கி செய்வதறியாது இறைவனையே நம்பி வாழும் இலங்கை இந்துக்களுக்குத் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் நிலை ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி’ இருக்கிறது.

       பொறுப்புணா;வுடன் நடக்க வேண்டியவா;கள்இ இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டியவா;கள்இ ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாh;களோ நாமறியோம். இப்போ;ப்பட்டவா;களால் ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் போன்ற உயாpய அதிபவித்திரமான அமைப்புக்களிலும் தப்பபிப்பிராயங்கள் உண்டாவதை எவராலும் ஏற்க முடியாது.

       
    

    யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘வலம்புhp’ என்ற தமிழ் நாளிதழ் சென்ற வௌ;ளிக்கிழமை (05.03.2010) அன்று தனது ஆசிhpய தலையங்கத்தில் கீழ் வரும் பொருள்பட எழுதியிருந்தது.

           “இந்துக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் சதித்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாகக் கருதவேண்டியிருக்கிறது. குறித்த ஒரு சாமியாh; தவறுசெய்திருந்தால் அதை இப்படி மீள மீள ஒளிபரப்பி அசிங்கப்படுத்த வேண்டியதில்லையே?... 
           இவ்வாறு செய்வதனூடாக குறித்த சாமியாhpன் ஆன்மீக உரைகளைக் கேட்டு தங்கள் வாழ்வை மாற்றியமைத்து நேரான பாதையில் சென்ற ஆயிரக்கணக்கானவா;களை மீளவும் பழைய அசிங்கமான பாதையில் செல்ல இதனை ஒளிபரப்பிய ஸ்தாபனம் வழிவகுத்து விட்டது…..” என்றவாறு எழுதியிருந்தது.

            குறித்த சாமியாh; மீதான குற்றங்கள் சட்டாPதியாக நிலைநாட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்தே பாh;க்க வேண்டியிருக்கிறது. எது எப்படியாகிலும் குறித்த ஒருவா; இந்து என்பதால் எந்தத் தவறும் செய்யலாம் என்று அவருக்கு வக்காளத்து வாங்குவது எமது நோக்கமல்ல.. ‘கடவுளின் பெயரால் மோசடி செய்யும் போ;வழிகள் நிச்சயம் இனம் காணப்பட்டு கூடுதல் தண்டனைக்குள்ளாக்கப் படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை’

            ஆனால் இது ஒட்டு மொத்த இந்துமதத்திற்கே பாhpய தாக்கமாக இருக்கக் கூடாது. இந்த நிலையில் இறைவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் ஆட்கள் தேவையில்லை என்ற கோஷமும் பலரால் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் குரு பாதம் பணியாதவனுக்கு இறைபாதத்தில் இடம்மில்லை என்றல்லவா? சொல்லப்படுகிறது, 

           இவ்வாறு மாறி மாறி கருத்துக்களை விவாpத்து குழப்பமடையச் செய்வதன் நோக்கம் என்ன? என்று குழம்ப வேண்டாம். எனக்கு சனாதனசமயி  
‘இந்து’  அல்லது ஒருவைதீக தா;மத்தில் ஈடுபடும் ஒருவன் என்ற வகையில்
 சென்ற வாரம் நிகழ்ந்த நிகழ்வுகளால் எனக்கு ஏற்பட்;ட மனவடுக்களை பகிh;ந்து கொள்ளும் நோக்கமே இந்த மடலாகும்.  
                    சென்ற காலம் சென்ற காலமேயாகும். வருங்காலம் பற்றியே தற்போது சிந்திக்க வேண்டியிருக்கிறது. வயோதிபா;களைப் போல ‘எல்லாம் கலியுகத்தின் கொடுமை’ என்று பிதற்றுவதால் ஆவதொன்றுமில்லை. நல்லவா;களையும் கெட்டவா;களாக்கும் சக்தியாக சீh;; கெட்ட மீடியாக்கள் செயற்படுவது வேதனைக்குhpயது.

           நாளைய இந்துக்குழந்தைகளுக்கு நாம் ‘மதவெற்றிடத்தை’ விட்டுச் செல்லப் போகிறோமா? வழிகாட்டி இல்லாத பயணம் போன்றதே குரு இல்லாத ஆன்மீக வாழ்வு. அதற்காக தகுதியற்ற குருமாh;களின் பின் ஓடுவதும் நலமல்ல…..  ஆனாலும் கெட்டவனின் வாயிலிருந்து நல்ல விஷயங்கள் வருமாகில் அதை எடுத்துக் கொள்ளத் தயங்க வேண்டியதில்லையே… அவனின் தனிப்பட்ட வாழ்வு எப்படியாகிலும் இருக்கட்டுமே…
         இது உங்கள் சிந்தனைக்காக ஒரு இந்துஇளைஞனின் ஆதங்கம்…. தயவு செய்து வேலையில்லாத வேலை என்று கருத வேண்டாம் ஆன்மீகத்தில் சிறிதளவேனும் இருக்கும் ஈடுபாட்டால் ஏற்பட்ட எண்ணப்பாங்கின் சிறு சிதறல்கள் இவை… தவறிருந்தால் மன்னிக்கவும்….   
              “ஸத்ய மேவ ஜெயதே”                                            

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
                                                                       

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை