Sunday, March 28, 2010

பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 25 ஆவது பட்டமளிப்பு விழா  26.03.2010,  27.03.2010, நாளை மறுதினம் 28.03.2010 ஆகிய நாட்களில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 2005 ஓக்டோபரில் 24 ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. இதன்பின் நாட்டுச் சூழல் காரணமாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறவில்லை.


இம்முறை 3972 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர். இவர்கள் 2006, 2007, 2008 கல்வி ஆண்டுகளில் சித்தியடைந்தவர்களாவர். 
நீர்வேலியைச் சேர்ந்த ஏறத்தாழ 10 பேர் முதுகலைமாணி (எம்.ஏ.) , இளங்கலைமாணி (பி.ஏ.), விஞ்ஞான மாணி (பி.எஸ்சி) போன்ற பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இவர்களுக்கு நீர்வேலி அரசகேசரிவிநாயகர் இணையம் (www.neervelyarasakesarippillayar.com) உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. இம்முறை பட்டத்தைப்பெறும் பட்டதாரியளுக்கு எல்லாம் வல்ல நீர்வேலி அரசகேசரி விநாயகன் சகல சௌபாக்கியங்களும் வழங்கி ஆசீர் வதிப்பாராக..

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை