Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, June 08, 2011

மஹாகும்பாபிஷேகம்

இந்து தர்மத்தை யாழகத்தில் அழியாமல் பாதுகாப்பதில் நீர்வை குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. நீர்வேலி என்று அழைக்கப்பெறும் இவ்வூர் போர்த்துக்கேயர் காலத்தில் இந்துசமயக் காவலரண்களுள்  ஒன்றாயிருந்திருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை தமது தந்திரோபாயத்தினால் கைப்பற்றிய போர்த்துக்கேய மதவெறியர்கள் இந்துக்களின் மீது கட்டாய மதத்திணிப்புச் செய்தனர்.
நல்லையிலும் மாவிட்டபுரத்திலும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களிலும் அமைந்த இந்துப்பேராலயங்கள் இவர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன. சைவப்பற்றாளர்களும் குருமார்களும் வதைக்கப்பட்டனர். “நல்லூரிலிருந்த இராசதானியும் பெரிய கோயிலும் (கந்தசுவாமி கோயில்) போர்த்துக்கேயரால் கி.பி 1621இல் முற்றாக அழிக்கப்பட, அங்கிருந்த கோயிற் சிலா விக்கிரகங்களைக் குளமொன்றில் புதைத்து விட்டு கோயிற் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்”
இப்படி அக்கால வரலாறு எழுதிய ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (யாழ்ப்பாண சரித்திரம், 1933) குறிப்பிடுகிறார். ஆக, அந்நிய ஆட்சிக் காலத்தின் காவலரணாக நீர்வேலி இருந்திருக்கிறது.
நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவ.சங்கரபண்டிதர் போன்ற பெரியவர்கள் வாழ்ந்த பதி. பெரியதோர் இந்துக் கல்லூரியைத் தன்னகத்தே கொண்ட ஊர். நீரவாடீபுரம் என்றும் கதலீவனம் என்றும் சொல்லப்படும் இவ்வூர் இந்துக்களின் வழிபாட்டு மொழியான சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் இலங்கையில் பெரும்பங்காற்றிய ஊர். இத்துடன் கவிஞர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும், ஆங்கிலக் கல்விமான்களுக்கும் இவ்வூரில் குறையில்லை. இவ்வாறாக.. வளம் பொருந்திய நீர்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது  நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோயில்.
விநாயகர், சிவபெருமான், அன்னை என்று மூவருக்கும் தனித்தனிக் கருவறைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் விநாயகருக்கும் சிவனாருக்கும் தனித்தனியே விஸ்தாரமான மண்டபங்களுடன் கூடியதாக கோயில் அமைந்திருக்கிறது. இரு ஆலயங்கள் ஒன்றிணைந்தாற் போன்றது இக்காட்சி..  இராஜசிம்ம கணபதி எனப் போற்றப்படும் அரசகேசரி கணபதிக்கு அருகிலேயே பாலாம்பிகை சமேதராக வைத்தீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். இவ்விரு இறைவர்களுக்கும் தனித்தனியே ஊஞ்சல் முதலிய இலக்கியங்களும் அமைந்து விளங்குகின்றன. வாயிலிலே பஞ்சதள ராஜகோபுரம்.. உள்ளே நுழைந்தால் ஒரு சிவாலயத்திற்குரிய அத்தனை இலட்சணங்களும் கொண்ட அமைப்பு. தென்பக்கம் இறைவன் தீர்த்தமாடும் திருக்குளம். உள்வீதியில் வலம் வருகிற போது திருமஞ்சனக்கிணற்றையும் பார்க்கிறோம்.

இது தான் இறைவனுக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பயன்படும் தீர்த்தக்கிணறு. மிகக் கவனமாகப் பார்த்தால் இதில் ஆச்சர்யம் ஒன்றுண்டு. கூபதீர்த்தமான இது மனிதர்களால் வெட்டப்படாதது. மூன்றடி விட்டமும் பதினெட்டு முழம் ஆழமும் கொண்ட இக்கிணற்றிலிருந்து அள்ள அள்ளக்குறையாத அமுதஜலம் பிரவாகிக்கிறது. இக்கிணற்றினை வைத்தே இவ்வாலய வரலாறும் ஆரம்பிப்பதால் இனிமை ததும்பும் இத்தீர்த்தத்துளியுடன் வரலாற்றுத் துளியையும் நோக்கலாம். இந்த கிணற்றின் ஆரம்பம் தொடர்பில் பல ஐயப்பாடுகள் உள. ஸ்ரீ ராமர் இராவண
வதம் நிறைவுற்றதும் சீதாதேவியுடன் இப்பகுதி வழியே வந்த போது தன் வில்லை ஊன்றிய இடத்தில் உருவானது இக்கிணறு என்ற கருத்தும் உண்டு. கோதண்ட வில் ஊன்றி நீர் பெற்ற இடமே இன்றைய கிணறு என்பர். இது எவ்வாறாகிலும், 1591-1616 காலப்பகுதியில் நல்லூரை இராசதானியாகக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆண்டவன் சிங்கைப் பரராஜசேகரன் என்ற பேரரசன். தமிழார்வம் மிக்கவனான இவன் நல்லூரில் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தமிழாய்ந்திருக்கிறான். யமுனா ஏரியைக் கட்டுவித்திருக்கிறான். புல இலக்கியங்களின் எழுச்சிக்கு காரணனாக விளங்கியிருக்கிறான். இந்த பரராஜசேகரனுக்கு உற்ற துணையாக அவனது மஹாமந்திரியாயும், மருகனாயும் விளங்கியவன் அரசகேசரி.
இவன் மந்திரி மட்டுமல்ல.. வடமொழியில் காளிதாசர் செய்த இரகுவம்சத்தைத் தமிழில் பாடிய கவியரசனுமாவான். ஆவன் ஓரிரவில் ஒரு கனவு கண்டான். அரசகேசரியின் கனவில் தோன்றிய ஆனைமாமுகத்து ஐங்கரப்பெருமான் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதிகாலையிலேயே எழுந்து கண்ட கனவின் உண்மையறிய தன் புரவியில் ஏறிப்பறந்தான்.  இன்றைக்கும் இராஜவீதி என்றழைக்கப்படுகிற வீதியூடே அவனது குதிரை பறந்தது. வழியில்.. தன் கனவில் கண்ட பனந்தோப்பு ஊடாக தன் குதிரையைச் செலுத்தினான். கடவுள் காட்டிய இடம் எது? தேடினான். ..தேடினான்… அவனது தேடலில் ஒன்றும் தென்படவில்லை. .. நா வறண்டது.. தாகம் வாட்டியது.. இப்போது அவன் தண்ணீர் தேடினான். அப்போது ஆச்சர்யமான கிணறு ஒன்றைக் கண்டான். அள்ளிப் பருகினான்.
ஆஹா.. அமிர்தமாக இனித்தது. ஆச்சர்யம் பொங்க கண்களை விரிக்க, அங்கே கிணற்றின் அருகில் அம்மையப்பருடன் ஆனைமாமுகக் கடவுள் அழகான சிலை வடிவில் காட்சி கொடுத்தார். ஆனந்தக் கூத்தாடிய அரசகேசரி தான் கண்ட கனவின் பயன் இது.. கண்ட இடம் இது என்று மகிழ்ந்தான். ஆகம விதிப்படி கோயிலை கட்டி குடமுழுக்குச் செய்தான். இவ்வாலயத்தின் திருமுற்றத்தில் வைத்தே, தான் செம்பாட்டுக்களால் தமிழில் பாடிய இரகுவம்சப் பெருங்காவியத்தையும் அரங்கேற்றினான். இவை காரணமாக, இக்கோயில் .. இன்று அரசகேசரிப்பிள்ளையார் கோயில் என்றும் செம்பாட்டுப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டுப் போற்றப்படுகிறது. இன்றைக்கு அரசகேசரி கட்டிய கோயில் இல்லை.. அதனை போர்த்துக் கேய மத வெறியர்கள் அழித்து விட்டார்கள். ஒல்லாந்தர் காலத்திற்கும் பின் இன்றைய கோயில் சிறு குடிலாக மீள ஆரம்பமானது. இன்றைக்கு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோயில். யுhழ்ப்பாணத்தின் தனித்துவமான தேர்களுள் ஒன்று நீர்வேலி அரசகேசரியான் ஆலயத்தில் காணப்படுகிறது. இக்கோயிலில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டுக் கொண்டு கொடியேறி 11 நாட்கள் மஹோற்சவம் நடக்கிறது. மார்கழித் திருவாதிரையைத் தீர்த்தமாகக் கொண்டு வைத்தீஸ்வரருக்கும் சிறப்பாக 10 நாள் உற்சவம் நடக்கிறது. இன்றைக்கு இவ்வாலயத்தில் சிவஸ்ரீ. சாம்பசதாசிவ சோமதேவக்குருக்கள் பிரதான குருவாக இறை பணியாற்றி வருகிறார். இவர் முன்னோர்களே இவ்வாலய குருமார்களாக பல்லாண்டுகள் பணியாற்றியிருக்கிறார்கள்.
1949ல் இவ்வாலய பரிபாலனம் சிவஸ்ரீ. சு.இராமஸ்வாமிக்குருக்கள் அவர்களால் அறங்காவலர் சபையிடம் கையளிக்கப்பட்டது. இன்று வரை அறங்காவலர் சபை இவ்வாலயத்தைச் செவ்வனே நிர்வகித்து வருகிறது. ஓய்வு பெற்ற கிராமிய வங்கியாளரான க.முருகையா போன்றோர் இத்தல வளர்ச்சியில் அறங்காவலர் சபையிலிருந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இத்தலத்து விநாயகப் பெருமான் பேரில் ஊஞ்சல், பதிகம், தோத்திரம் பிள்ளைத்தமிழ் ஆகிய பிரபந்தங்களும் சிவனார் பேரில் ஊஞ்சல் ஆதியனவும் உள்ளன. ஆலயத்தினைச் சுற்றி ஸ்ரீ கணேசா சனசமூக நிலையம், ஸ்ரீ கணேசா முன்பள்ளி, ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை, அறுபத்து மூவர் குருபூஜை மடம், சீ.சீ.த.க. பாடசாலை, அன்னதான மடம், போன்ற அறப்பணி நிலையங்கள் அமைந்து அறம் வழவாப் பணியாற்றி வருகின்றன. அண்மைக் காலத்தில் வாழ்ந்த சிவதொண்டன் ஸ்ரீமத் செல்லத்துரை சுவாமிகளின் குலதெய்வமும் அரசகேசரி ஆண்டவனே.. இவ்வாறாக, அந்தணரும், அரசர்களும், அற்புதத் துறவியரும், அறிஞர்களும், கவிஞர்களும்,வணிகர்களும் விவசாயப் பெருமக்களும் யாபேரும் காதலித்துப் போற்றிடும் அரசகேசரி ஆண்டவனை நம்பினால் அவன் கைவிட மாட்டான் என்று ஆலயம் சார்ந்த அன்பர்கள் உறுதி கூறுகின்றனர். கும்பாபிஷேகம் இறுதியாக, 1995ல் குடமுழுக்குக் கண்ட இக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பெற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.06.2011 அன்று காலை 7.15- 8.15 சுபமுகூர்த்தத்தில் மஹாகும்பாபிஷேகம் காண்கிறது. நாளை புதன்கிழமை 08.06.2011 காலையில் கர்மாரம்பத்துடன் இதற்கான கிரியைகள் ஆரம்பமாகின்றன. 11ம் திகதி சனிக்கிழமை எண்ணைக்காப்பும் இடம்பெறுகிறது. இவ்விழாவிற்கு ஆலய ஸ்தானிகர் கா.சா.சோமதேவக்குருக்கள் பிரதிஷ்டாச்சார்யராகவும், தா. மஹாதேவக்குருக்கள், ஆ.சந்திரசேகரக்குருக்கள், கு.தியாகராஜக்குருக்கள் ஆகியோர் ஸர்வ போதகாச்சார்யர்களாயும், ப.ராஜகோபால சர்மா சர்வசாதகாச்சார்யராயும் பணியாற்றுகின்றனர். தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏராளமான சிவாச்சார்யார்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.  இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நீர்வையூர் பத்தெழுச்சியுடன் விழாக்கோலம் பூண்கிறது. கும்பாபிஷேக காலத்தை தவக்காலமாக.. விரதம் பூண்டு நீர்வை மக்கள் பக்தி சிரத்தையுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.


நீர்வை. தி.மயூரகிரிசர்மா

Thursday, September 30, 2010

புரட்டாதிச் சனிவிரதம்


"புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 18ம் திகதி (18.09.2010)  முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகளுடன் (செப்ரெம்பர் 25, ஒக்ரோபர் 02, 09, 16) ஐந்து புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.

Monday, September 27, 2010

சனீஸ்வர விரதம்

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. 

கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம்.

Sunday, August 15, 2010

ஆலயச்சிறப்புமிக்க நீர்வேலி

ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது.

Sunday, August 08, 2010

NEERVELY ARASAKESARI TEMPLE


Neervely Arasakesari Temple is situated about North of 8 k.m post on the Jaffna- point pedro road. The temple must has been built by “Arasakesari”. The minister of Jaffna kingdom.

Pararajasekaran is a main king of Jaffna kingdom. (1478-1519). He was a successful king of Jaffna. (kingdom- Nallur) The Pararajasekar king’s Brother Segarajasekaran.  Arasakesari a Nephew of the king was an Sanskrit scholar who translated  “kaviraj” Kalidasa’s sanskrit classic entitled “Raguvamsam” in to tamil.

Wednesday, August 04, 2010

சமய மெய்நெறி நோக்கிய ஒரு பார்வை

கிறிஸ்தவம் என்பது இது அல்லவா?

 இன்றைக்கு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு மதப்பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் இந்து மதத்தினைப் பற்றி பலவாறான அவதூறுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்துமத்தில் உள்ள பல்வேறு கிரியை மரபுகளை தவறானது என்றும் மூடத்தனமானது என்றும் கூறி தமது வழிபாட்டுமறைமையே மேன்மை மிக்கது என்று பட்டி தொட்டி எங்கும் பிரசங்கித்து வருகின்றார்கள். தெற்காசிய தேசமெங்கும் இந்துக்களைக் குறிவைத்து மதப்பிரச்சாரம் செய்து வருவதைத் தவிர மேற்குலக நாடுகளில் சென்று வாழும் இந்துக்களின் வீடுகள் தேடி வந்தம் இவர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Sunday, August 01, 2010

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்


1. விநாயகர் துதி

ஒற்றைக் கொம்பும் செந்நிற மேனியும்
 ஒளிரும் யானைத்திருமுகமும் பாசாங்குசமும்
வற்றாக் கருணைவளர் சிற்றடிகளும்
 வரதகரமும் உடைய நின்னை வாழ்த்தும்
நற்றமிழ் பிள்ளைக் கவி தழைத்தே
 நலமுற விளங்கிடவே கஜமுகனைச்
செற்றவனே நீர்வை அரசகேசரியாய்
 செம்மை வரந்தந்து காத்திடுவாயே

Thursday, April 22, 2010

நீர்வேலிக்குப் பெருமை


இரகு வம்சத்தையும் தேடிப் பதிப்பிப்பது நீர்வேலிக்குப் பெருமை
      இரகுவம்சம் கடினமான தமிழில் ஆக்கப்பட்டது. எங்கோ ஒரு சில நூலகங்களில் இருப்பதாகத் தகவல். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ கணேசையர் 50 ஆண்டுகளுக்கு முன் பொருளோடு பதிப்பித்ததாகவும் வாசித்திருக்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கோயிலில் நடந்த விழாவில் ; நீர்வை முருகையன் “ அரசகேசரி இங்கிருந்து தான் இரகுவம்சம் எழுதியிருக்க வேண்டும். எனவே இது பற்றி ஆய்வு நிகழவேண்டும். இதனால் தான் செம்- பாட்டு பிள்ளையார் ( செம்மையான நல்ல பாட்டுக்கள் எழுந்த இடம்) என்று ஆகியிருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தமையும் ஞாபகமிருக்கிறது.

சிலை அமைப்பது சிறப்பு


அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைப்பது சிறப்பு

            15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனும் தமிழில் “இரகுவம்சம்” என்ற பெரிய அரிய இன்று எம் கைகளுக்கு அகப்படாத காவியத்தை படைத்தவனும் நீர்வேலியில் அரசகேசரிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டியவனும் யாழ்ப்பாண ராச்சியத்தில் மந்திரிப்பதவி வகித்தவனுமாகிய அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைய வேண்டும் எனப் பெரியோர் விரும்புகின்றனர். சென்ற வாரம் மேற்படி கோயில் தொடர்பாக உதயன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது.

Tuesday, March 30, 2010

பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
     யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.. வேறு எங்குமில்லாத வகையில், மேற்படி பல்கலைக்கழகம் ஒரு அரச நிறுவனமாக, இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் இங்கு பட்டமளிப்பு விழா தோரணங்கள், மாவிலைகள், வாகைமாலைகள், நந்திக்கொடிகள் கட்டப்பெற்று கோலங்கள் வரையப்பெற்று நிகழ்வது வழமை.

Sunday, March 28, 2010

காலத்தின் தேவை...


“இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப பல்துறைப்பட்ட தகுதியும் திறமையும் உடையவர்களாக மாறவேண்டும்”; பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை

 இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப தங்களை தகுதியும் திறமையும் பொருந்தியவர்களாக மாற்றிக் கொண்டு நமது சமூகத்தை வழிகாட்டுபவர்களாகத் திகழ வேண்டும் என்று தரிவித்தார் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையப் பணிப்பாளருமான பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை.
 

Saturday, March 20, 2010

ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலையின் ஆண்டுவிழாவும் பரிசளிப்பும்

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழலில் அமைவு பெற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக இயங்கும் ஸ்ரீகணேசா அறநெறிப்பாடசாலையின் விழாவும் பரிசளிப்பு வைபவமும் வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2010) அன்று பிற்பகல் 1.30க்கு பாடசாலை முதல்வர் ஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Wednesday, March 17, 2010

சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, March 11, 2010

அறிந்து கொள்வோம்...

அறிந்து கொள்வோம் நம் ஆன்மீகத்தலைவர்களை….
    செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்
                                 

                        ஒரு சில கசப்பான சம்பவங்களையடுத்து இந்துக் குருமார்கள், இந்துத்துறவிகள் மீது கண்டபடி குற்றம் சுமத்த இந்துவிரோதிகளும்  மதமாற்றச் சக்திகளும் மதங்களுக்கு எதிரான நாத்தீகவாதிகள் சிலரும் வருமானத்தையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்களைச் சேர்ந்த சிலரும் தமிழகத்திலும் இலங்கையிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, March 09, 2010

இந்துக்கள் இன்றைய நிலையில்….


சென்ற வாரம் உலகெங்கும் வாழும் இந்துக்களிடையே பாhpய உணா;வலைகளை ஏற்படுத்தி வேதனைக்குhpய எண்ணப்பாங்குகளை விதைத்துச் சென்றிருக்கிறது.
      
       இந்த வேதனைக்குhpய இந்துத்தலைவா;கள் என்று மக்களால் மதிக்கப்பட்டவா;களின் கூத்துக்கள் பற்றிய உண்மையோஇ பொய்யோ செய்திகள் இன்னமும் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

Friday, February 12, 2010

பரந்த அறப்பணி நடைபெறும் ஆலயச்சூழல்

பரந்த அறப்பணி நடைபெறும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல்
              
       நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல் இயல்பாகவே சமூகப்பணி நடைபெறும் சூழமைவுடையதாகவுள்ளது. கி.பி 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் பரம்பரைத் தோன்றலான இரகுவம்ச மகாகாவியத்தைத் தமிழில் படைத்த அரசகேசரி மகாமந்திரியால் ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடையதாக இவ்வாலயமுள்ளது. இப்பழமையும் அருட்சிறப்பும் மிகுந்த இவ்வாலயச் சூழல் இயல்பாகவே தெய்வீகத் தன்மையுடன் சமூகப்பணிகள் நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.                                                                                                                

Wednesday, December 30, 2009

நீர்வேலி அரசகேசரி விநாயகர் தேர்திறன்

யாழ், பல்கலைக்கழக முன்னைநாள் துணை விரிவுரையாளரும் தெல்லிப்பழைக் கோட்டத்தின் திட்டமிடல் உதவி அலுவலருமான திரு. வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் B.A(Hons) அவர்கள் எழுதி்ய ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பிரதான பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றது.








Saturday, November 28, 2009

வைரவிழாவும்,வெள்ளி விழாவும்

இன்று (29.11.2009) நீர்வேலி ஸ்ரீ கணேசா சன சமூகநிலைய வைரவிழாவும் ஸ்ரீ கணேசா முன்பள்ளி வெள்ளி விழாவும் அரசகேசரிப்பிள்ளையார் இணையத்தள அறிமுக விழாவும். நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய முன்பள்ளியில் வெகுவிமரிசயாக நடைபெறஉள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.



Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம்.

Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை