Monday, September 27, 2010

சனீஸ்வர விரதம்

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. 

கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம்.
இதனால் புரட்டாதி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.  ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரமிருக்க முடியாதவர்கள், புரட்டாதிச்சனி நாட்களில் விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். 



சனிஸ்வரனுக்குறிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினைஅவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய காரியங்களாகும். உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளுப்பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று.



இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும்.



ஏனைய விரதங்களுக்கு எண்ணை முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால் சனிஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்து நீராடல் வேண்டும். 



கறுப்புத் துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணை விட்டு அதனைத் தீபமாக ஏற்றி சனிதோஷத்திற்கு பரிகாரம் செய்யலாம்.இதனை சிவனாலயங்களில் செய்வது மிகச் சிறப்பாகும்....



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை