அழகு இரதமேறி வந்தான், அருட்காட்சி தந்து நின்றான்.!
அரசகேசரிப்பிள்ளையாரின் தேர்த்திருவிழாவான இன்று பஞ்சமுக வினாயகர் தம்பி முருகப்பெருமான் சமேதரராக காலை ஆறு மணிக்கு வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பித்து ஈழத்தின் தலை சிறந்த தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களின் இசை மழை பொழிய கற்பூர தீபாராதனையுடனும், சாம்பிராணி வாசனை அடியவரின் உள்ளத்துட்புகுந்து பக்திப்பரவசமூட்ட, கொடி, குடை ஆலவட்டம் மற்றும் தீப்பந்தங்கள் அணிவகுக்க ஓதுவார், தேவார, திருவாசக, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் முதலான பஞ்சபுராண பாரணங்களை ஓத மற்றும் பல அடியார்களின் அங்கப்பிரதட்டை பின்தொடர அந்தணச்சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓத உள்வீதி வலம் வந்து நீர்வைமண்ணிலே கிடைக்கப்பெற்ற அனைத்துப் பூக்களாலும் பூமழை சொரிய சூரிய பகவான் தனது வெங்கதிர்களை அடக்கி இயற்கை கூட தேரோட்டம் சிறக்க ஆசீர்வாதம் புரிய வெளிவீதியிலிறங்கிய பெருமான் சரியாக எட்டு முப்பது மணிக்கு அழகிய சித்திரத்தேரிலேறி அழித்தல் தொழிலுக்கு ஆயத்தமானார்.
அரசகேசரியானின் அழகிய சித்திரத்தேர், அடியார்கள் அரோகரா என்ற கோசத்துடன் வடம்பிடித்திழுக்க திரு ச.லலீசன் அவர்களின் நேர்முக வர்ணனையுடன், பவனி வரத்தொடங்கி பத்துமணியளவில் ஆடி அசைந்து இருப்பிடத்தை வந்தடைந்து.
இன்றைய உதயன் நாளிதழில் அரசகேசரியானின்ிருபக்கச் சிறப்பிதழ் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
|
வசந்தமண்டபப் பூசையின் போது |
|
அடியவருள் ஒருபகுதியினர் தீபாராதனையின் போது |
|
உள்வீதி வலம்.. |
|
சாம்பிராணித் தூபத்துள் அண்ணனும் தம்பியும்.. |
|
யாகபூசையின் பின்னர் பொட்டிடல்.. |
|
வெளிவீதி நோக்கி.. |
|
கற்பூரச்சட்டியேந்தும் அடியவர்கள் |
|
பூக்கள் மழையாகச் சொரிய புறப்படுகிறான் தேரேற
|
|
வடமிழுக்க |
|
காத்துநிற்போர்.. |
|
சிதறப்போகும் தேங்காய்கள் |
|
சிதறியதை அப்புறப்படுத்தல் |
|
பக்தி மயக்கத்திலாழ்த்தும் இனிய சூழல் |
|
சிதறிப்போகட்டும் நம் துயரெல்லாம்.. |
|
பாவங்களும் தான். |
|
நேர்த்திக்கடன் தீர்க்கவென்று.. |
|
அடியவர் அலைமோத மோதகப்பிரியன்.. |
|
ஆறுமுகனும் ஆய்த்தமாகிறான்.. |
|
ஒன்றுகூடி வடம்பிடித்து.. |
|
பிந்தொடர்கிறான் தம்பியும். |
|
வானளாவியமரங்களூடு வண்ணத்தேர். |
|
பவனிமுடித்து இருப்பிடம் நோக்கி |
|
முருகனுக்கும் அரோகரா.. |
|
தூக்குகாவடி பிந்தொடர கந்தனும் இருப்பிடம் நாடி.. |
|
தேரை வழிச்செலுத்தும் தீவிரத்தில் சறுக்குக்கட்டையுடன். |
|
காவடிகளில் ஒன்று |
|
நேர்த்தியான வாழ்விற்காய் நேர்த்திக்கடன் கழிக்கின்றோம்.. |
|
தேர்முட்டி அர்ச்சனைக்காய் தேர்முட்டி நிற்கிறார். |
|
ஆனைமுகன் அருளுக்காய் அரசியற் பிரமுகர்கள் |
|
இன்னும் அருள் வேண்டுமாம் |