நல்லாசிகள்

நல்லாசிகள்
எல்லாம் வல்ல அரசகேசரிப் பிள்ளையார் துணை நிற்க. எமது மெருமான் பெயரில் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சரித்திரப்புகழ் பெற்ற எமது பிள்ளையாரின் பெருமை உலகம் பூராகவும் பரவும் போது எம்பெருமான் திருவருள் ஆன்ம கோடிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எமது நல்லாசிகள் உரித்தாகட்டும். உலகம் போற்ற http://www.neervelyarasakesarippillayar.com/ இத்தளம் விளங்கட்டும். நல்வாழ்த்துக்களும் இறையருளும் பெற்று விளங்கட்டும்.
நன்றி
சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்கள்,

ஸ்ரீஅரசகேசரிப்பிள்ளையார் கோயில் (பிரதமகுரு)

நீர்வேலி
இணையம் வழியே அரசகேசரியான் புகழ் பரவட்டும்.
இன்றைய தகவற் தொழிநுட்ப உலகிற்கு ஏற்ப நமது சமய ஸ்தாபனங்களையும் வளார்த்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் ‘அரககேசரி‘ மாமந்திரி அவர்களால் கி.பி 16ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட் வரலாற்று சிறப்புடைய அரசகேசரி வினாயகர் ஆலயத்திற்கு ஓர் இணையத்தளம் உருவாக்கப்படுவதை அறிந்து மகிழ்கிறோம்.

‘www.neervelyarasakesarippillayar.com‘ என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த இணையத்தளம் மேற்படி ஆலயம் சார்ந்த செய்திகளை உலகெங்கும் வாழும் எம் பெருமானின் அடியார்களுக்கு ஆலயச்செய்திகளை, படங்களை உடனுக்குடன் தந்து அவர்களின் பக்தி வளர உதவும் என நம்புகிறோம்.

மேற்படி இணையத்தை உருவாக்ளி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு நம் அன்பு ஆசீர்வாதங்களையும் வாழ்து்க்களையும் தெருவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

தொடர்ந்தும் மேற்படி இணையக்குழுமத்தார் நம்மூருக்கு, நமது அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்திற்கு மிக்க பெருமையுன்டாகும் வண்ணம் உலகளாவிய வலைப்பின்னலூடாக நற்காரியங்கள் செய்யவும் அவற்றுக்கு எவ்வித இடையூறும் இன்றி நல்லபடி முழுமை பெறவும் விநாயகப் பெருமான் பாதம் பணிந்து ஆசிகளும் வாழ்த்துக்களும் வழங்கி மகிழ்கிறோம்.

இவ்வண்ணம்

சிவஸ்ரீ கு.தியாசராசக்குருக்கள்

செல்லக்கதிர்காமகோவில்

(பிரதமகுரு)

நீர்வேலி.


இணையத்திற்கு ஆலய பரிபாலன சபைப் பொருளாளராகிய எனது ஆசியுரை
நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையாலும் வேறு காரணங்க்களாலும் எமது விநாயக அடியார்கள் கடல் கடந்து பல்வேறு நாடுகளில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்ஙனம் அவர்கள் வேஏற்று நாடுகளுக்குச் செல்லும் போதும் அங்கு வாழ்ந்து வரும் போழுதும தமது குல தெய்வமாகிய நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரை தம்மனத்திரையிலிருத்தி வளிபாடு செய்து நிறைவாக வாழ்வது புலம் பெயர் நாட்டிலிருந்து இங்கு வரும் அடியார்கள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

        எனவே இத்தகைய சிந்தனையோடு வாழ்பவருக்கு இணையம் வழியே எம்பெருமானின் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் சிறப்புக்களையும் ஆலையத்தின் புதுத் தோற்றத்தையும் உடனுக்குடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் அவர்கள் தாம் நேரில் ஆலயத்திற்கு வந்து தரிசித்தது போன்று பக்தி பரவசத்தில் மூழ்கி இன்புறுவார்கள். அத்துடன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்பார்கள்..

        ஆகவே மேற்படி இணையத்தை www.neervelyarasakesarippillayar.com என்ற பெயடில் இணையத்தை உருவாக்கி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு எஙகளுடைய ஆசீர்வாதத்தை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற ஆனந்தமடைகிறோம்.

                                                இங்கனம்
   ச.க.முருகையன்
பொருளாளர்
நீர்வேலி அரசகேரிப் பிள்ளையார்
நீர்வேலி.



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை