ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’.
அனலாசூரன் அருகில் செல்ல முடியவில்லை. ஆவன் வாயிலிருந்து நெருப்பை கக்குகிறான். அருகில் செல்பவர்கலெல்லாம் சாம்பலாகி விடுகிறான்’. துன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் தனக்குள்ள சக்தியால் எரித்து விடுவான் அவன் அப்படி ஒரு வரத்தை பெற்றிருக்கிறான். அனலாசூரன எங்களையெல்லாம் எரித்து சாம்பலாக்குவதற்கு முன்பு எங்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும். ‘சரி உங்களை காப்பாற்றுகிறேன் கவலை கொள்ள வேண்டாம்’. கணேசன ;ஒரு பெரும் படையுடன் அனலாசூரனை அணுகிய போது அப்படையை அனலாசூரன் எரித்து சாம்பலாக்கி விட்டான். கணேசனின் கோபம் தலைக்கேறியது.
அனலாசூரனுக்கும் கணேசனுக்கும் கடும் போர் நடந்தது. ‘அனலாசூரனை சாதாரண ஆயுதங்களைக் கொண்டு வெல்ல முடியாது. ஆவனை எதிர்பாராதபடி செய்யா வேண்டும்’. கணேசன் தன் துதிக்கையால் அனலாசூரனை பிடித்து விழுங்கி விட்டான். அனலாசூரன் உயிருடன் விழுங்கப்பட்டதால் கணேசன் வயிற்றில் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான். ஆதனால் கணேசனின் வயிறு எரிந்து கொண்டிருந்தது. ‘ஐய்யோ என் வயிறு பற்றி எரிகிறதே அணைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’. தேவர்கள் அலறிஅடித்து ஓடிவந்தனர். ‘ஏதோ செய்ய வேண்டும் இர்லையேல் கணேசன் எரிந்து சாம்பலாக்கி விடுவான்’. கங்கை நீரை எடுத்து வந்து கணேசனின் தலையில் ஊற்றினார்கள். தீ தணிந்ததாகத் தெரியவில்லை. தேவர்கள் பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்துக் கொணர்ந்து கணேசனின் தலையில் வைத்தனர்.இதனாலும் தீ தணியவில்லை. ஒரு முனிவர் அறுகம்புல்லைக் கொணர்ந்து கணேசனின் தலையில் வைத்தார். தீ அணைந்தது அனலாசூரன் இறந்து விட்டான்;. ‘என்னை பூஐpக்க விரும்புபவர்களும் என்னுடைய வரத்தைப் பெற விரும்புபவர்களும் என்னை அறுகம்புல் கொண்டு வணங்க வேண்டும்’. என்று அருளினார் கணேசன். அன்று முதல் அறுகம்புல் கொண்டு வழிபாடும் வழக்கம் உணடாயிற்று.