Tuesday, November 10, 2009

தோப்புக்கரணம்.

பாலகன் கனேசனுக்கு திடீரென விஸ்னுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. கனேசன் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டான். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டான் விஸ்ணுவிற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
எப்படி கனேசனிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது அவன் பலசாலியாயிற்றே பகவான் விஸ்ணு சிறிது நேரம் யோசித்தார். கணேசனை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் விஸ்ணு தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்
இதை பார்த்தவுடன் கனேசன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான் உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஸ்ணு அதை எடுத்து கொண்டார்.
ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு கனேசனை வழிபடுகிறோம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை