Thursday, September 16, 2010

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா

நீர்வேலி அரசகேசரித்தலத்தில் எழுந்தருளியுள்ள பாலாம்பிகை உடனாய
வைத்தியநாதப்பெருமான் ஆவணி மூலநாளாகிய இன்று மதியம்






‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’


என்று மாணிக்கவாசகர் பாடும் அற்புத திருவிளையாடாலாகிய பிட்டுக்காக மண்சுமந்த லீலையை யாவரும் மீண்டும் கண்டருளும் வண்ணம் அருளினான். இறைவன் மண்வெட்டி தூக்கிய கரத்துடன் தலையில் கச்சை அணிந்து கூடையில் மண் சுமந்த காட்சி மிக அழகாயிருந்தது.

இதன் பின்னர் செந்நிறக்குதிரையில் எழுந்தருளி வீதியுலாக்காட்சி கொடுத்தான் பரமன். அதனைப் பார்த்து ‘நம பார்வதீபதயே… ஹர ஹர மஹாதேவா’ என்று வழிபாடாற்றிய அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதமாக இன்சுவைப் பிட்டு வழங்கப்பெற்றது.
தகவல்-
மயூரசர்மா


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை