Thursday, April 22, 2010

சிலை அமைப்பது சிறப்பு


அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைப்பது சிறப்பு

            15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனும் தமிழில் “இரகுவம்சம்” என்ற பெரிய அரிய இன்று எம் கைகளுக்கு அகப்படாத காவியத்தை படைத்தவனும் நீர்வேலியில் அரசகேசரிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டியவனும் யாழ்ப்பாண ராச்சியத்தில் மந்திரிப்பதவி வகித்தவனுமாகிய அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைய வேண்டும் எனப் பெரியோர் விரும்புகின்றனர். சென்ற வாரம் மேற்படி கோயில் தொடர்பாக உதயன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது.

       நல்லூரில் சங்கிலியனுக்கும்; புன்னாலைக்கட்டுவனில் தொல்காப்பியக்கடல் கணேசையருக்கும் கோப்பாயில் ஆறுமுக நாவலருக்கும் குப்பிளானில் செந்திநாதையருக்கும் இணுவிலில் பரராஜசேகரமன்னனுக்கும் கோயில் வீதியில் சிலை இருப்பது போல நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலய வீதியில் அரசகேசரிக்கு ஒரு சிலை இருந்தால் நம் கோயிலை நாம் சரித்திரப்பிரசித்தி பெற்றது என்று சொல்லாமலே சிலை மூலம் நிறுவிக்காட்ட முடியும்.




தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை