ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று உரும்பிராயில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ராமகிருஷ்ணபரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர், ,தூயஅன்னை சாரதாதேவி ஆகியோரது கொள்கைகளை பரப்புவதையும் ஆன்மீகப்பணியாற்றுவதையும் மக்கள் சேவை செய்வதையும் இலக்காகக் கொண்ட தூயதுறவிகளை தன்னகத்தே கொண்டு பணியாற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மாபெரும் ஆன்மீக இயக்கமாகிய ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று நீர்வேலிக்கு அருகிலுள்ள உரும்பிராயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்து ஆன்மீக நெறியாளர்களுக்கு இதுவொரு பேரின்பச் செய்தியாகும். இது பற்றிய பல தகவல்களை கொழும்பு ராமகிருஷ்ணமிஷன் வலைத்தளத்தில் பார்வையிடமுடியும். சுவாமி ராஜேஸ்வரானந்தர அண்மையில் யாழ்ப்hணம் வந்து இப்பணிகளைப் பார்வையிட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய சில தகவல்களை கொழும்பிலுள்ள ராமகிருஷ்ணமிஷன் சார்ந்தோர் நீர்வேலி இணையத்துடன் பகிர்ந்து கnhண்டுள்ளனர். உலகெங்கும் வாழும் சுவாமி விவேகானந்தர் வழியைப் பின்பற்றுவோர் இப்பணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
தி.மயூரகிரி - நீர்வேலி