Thursday, May 06, 2010

கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப்படிப்பு

அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப் படிப்புத் தற்போது இடம்பெற்றுவருகின்றது. அதில் தற்போது தட்ச காண்டப் படிப்பு இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27.05.2010 வியாழக்கிழமை வைகாசி விசாக தினத்தன்று கந்தபுராணப்படிப்புப் பூர்த்தியாகும். அன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படும். கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. உற்பத்திக் காண்டம்இ அசுர காண்டம்இ மகேந்திர காண்டம்இ யுத்த காண்டம்இ தேவ காண்டம்இ தட்ச காண்டம் என்பனவே அவையாகும்.

இந்த வகையில் சென்ற செவ்வாய்க்கிமை தேவசேனா திருமணப்படலம் படிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பணியில் ஆலய பொருளாளர் முருகையா அவர்கள் முழுமூச்சாக ஈடுபடுவதும் குறிக்கத்தக்கதே.
தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
  

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை