Wednesday, December 30, 2009

நீர்வேலி அரசகேசரி விநாயகர் தேர்திறன்

யாழ், பல்கலைக்கழக முன்னைநாள் துணை விரிவுரையாளரும் தெல்லிப்பழைக் கோட்டத்தின் திட்டமிடல் உதவி அலுவலருமான திரு. வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் B.A(Hons) அவர்கள் எழுதி்ய ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பிரதான பகுதிகள் இங்கு பிரசுரமாகின்றது.








Monday, December 28, 2009

பிள்ளையார் கதை மென்புத்தகம்

கடந்த பதிவுகளில் வந்த பிள்ளையார் கதை  மென்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

திருவெம்பாவை

திருவெம்பாவை வேண்டுகோள்.

எமது ஆலயத்தில் மார்கழிமாதத்தில் நடைபெறும் மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இத்திருவிழாவின் இன்னோரு விசேட நிகழ்வான பஜனைப்பயணம் திரு.சந்திரன் தலைமையிலான பஜனைக்குழுவினர் நமது ஊரில் உள்ள வீதிகளால் பஜனைசெய்து வருவார்கள். கடந்த காலங்களைப்போன்று, அவர்களுக்கு அடியவர்கள் ஊக்கமளிக்கும்வண்ணம் வேண்டப்படுகிறீர்கள்.

Sunday, December 27, 2009

கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள்



19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற கஜமுக சங்காரத்தின் புகைப்படங்களை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்..
கஜமுக சங்காரத்தின் புகைப்படங்கள் 

Tuesday, December 22, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6

'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!

போற்றித் திருவகவல் 

அருள்புரிந்து அருளும் அரசே போற்றி 
இருவினை துடைக்கும் இறைவா போற்றி

மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து 
கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப 

வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப 
ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்

வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென 
விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்



"பிள்ளையார் கதை"-5

"பிள்ளையார் கதை"-5

[605-745] இவ்விரதத்தின் பயனும், இதனை முறையாகச் செய்யாதவர்க்கு நிகழ்ந்த தீங்கும் இறுதியாகச் சொல்லப்படுகிறது. 


கண்ணநீ கண்ணிலாக் கட்செவி ஆகுஎனக் 
தண்நறுங் குழலுமை சாபமிட் டதுவும் 

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்த 
விக்கின விநாயகன் விரதம் நோற்றுஅதன்பின் 

சுடர்க்கதை ஏந்துந் துளவ மாலையன் 
விடப்பணி யுருவம் விட்டு நீங்கியதும், [610]
[துளவம்= துளசி] 



"பிள்ளையார் கதை - 4"


"பிள்ளையார் கதை - 4" 


[401-604] திருமுருகன் அவதாரம் 404 முதல் 450 முடியவும், விநாயகசட்டி விரதம் 528 முதல் 569முடியவும் இதில் முறையாகக் கூறப்பட்டுள்ளது.] 


அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார். 
[திருமுருகன் அவதாரம்] 
ஈங்கு இது நிற்க இவ்விர தத்துஇயல் 


ஓங்கிய காதைமற் றொன்று உரை செய்வாம் 
கஞ்சநான் முகன் தரும் காசிபன் புணர்ந்த 

வஞ்சக மனத்தாள் மாயைதன் வயிற்றிற் 
சூரன் என்று ஒருவனுந் துணைவருந் தோன்றி 


Wednesday, December 16, 2009

"பிள்ளையார் கதை" - 3

"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங் 
கருவி களாலுங் கால னாலும் 

ஒருவகை யாலும் உயிர ழியாமல் 
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் 

வரம் பெறுகின்ற வலிமை யினாலே 
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் 

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் 
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் 
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]


Tuesday, December 15, 2009

பிள்ளையார் கதை வேண்டுகோள்

விநாயகர் அடியார்களே!
நீர்வேலியின் மத்தியிலே எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்து வரும் எம்பெருமானுக்கு நிகளும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 17மஆம் நாள் (03.12.2009) வியாளக்கிழமை நண்பகல் 11.00  மணிக்கு விசேட அபிசேக ஆராதனையுடன்  விரதம் ஆரம்பமாகும். அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இலட்சார்ச்சனை ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும். 19ம் நாள் மார்கழி மாதம் திங்கட்கிழமை (21.12.2009) பிற்பகல் 4 மணிக்கு கஜமுக சங்காரம் நடைபெறும்.

பிள்ளையார் கதை 2

நூல்: 

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் 
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் 
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற 
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு 
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

 

Sunday, December 13, 2009

பிள்ளையார் கதை 1

கணபதி துணை.

பிள்ளையார் கதை

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.



விநாயகர் விரதம்

க்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம். 
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.




Saturday, December 12, 2009

"பிள்ளையார் கதை"

டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!
இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு!
விநாயகப் பெருமானுக்கான விநாயகசட்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.
இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்

Saturday, November 28, 2009

வைரவிழாவும்,வெள்ளி விழாவும்

ன்று (29.11.2009) நீர்வேலி ஸ்ரீ கணேசா சன சமூகநிலைய வைரவிழாவும் ஸ்ரீ கணேசா முன்பள்ளி வெள்ளி விழாவும் அரசகேசரிப்பிள்ளையார் இணையத்தள அறிமுக விழாவும். நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய முன்பள்ளியில் வெகுவிமரிசயாக நடைபெறஉள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.



Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம்.

ஆலய உற்சவ விபரம்

மிழ் ண்டிகை நாட்ள்
  • ஜனவரி
  1. 13, 2010 மார்கழி 29, விரோதி புதன் போகிப் பண்டிகை
  2. 14, 2010 தை 1, விரோதி வியாழன் தைப்பொங்கல் , தை அமாவாசை
  3. 15, 2010 தை 2, விரோதி வெள்ளி மாட்டுப்பொங்கல்
  4. 30, 2010 தை 17, விரோதி சனி தைப்பூசம்
  • பிப்ரவரி
  1. 12, 2010 தை 30, விரோதி வெள்ளி மகா சிவராத்திரி
  2. 28, 2010 மாசி 16, விரோதி ஞாயிறு ஸ்ரீ மாசிமகம்
  • மார்ச்
  1. 16, 2010 பங்குனி 2, விரோதி செவ்வாய் தெலுங்கு வருடப்பிறப்பு
  2. 2010 பங்குனி 10, விரோதி புதன் ஸ்ரீ ராமநவமி
  3. 29, 2010 பங்குனி 15, விரோதி திங்கள் பங்குனி உத்திரம்
  • ஏப்ரல்
  1. 14, 2010 சித்திரை 1, விக்ருதி புதன் தமிழ்ப்புத்தாண்டு
  2. 25, 2010 சித்திரை 12, விக்ருதி ஞாயிறு மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
  • மே
  1. 4, 2010 சித்திரை 21, விக்ருதி செவ்வாய் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
  2. 16, 2010 வைகாசி 2, விக்ருதி ஞாயிறு அக்ஷய திருதியை
  3. 27, 2010 வைகாசி 13, விக்ருதி வியாழன் வைகாசி விசாகம்
  4. 28,2010 வைகாசி 14, விக்ருதி வெள்ளி அக்னி நட்சத்திரம் நிவர்த்தி
  • ஆகஸ்ட்
  1. 3, 2010 ஆடி 18, விக்ருதி செவ்வாய் ஆடிப் பெருக்கு
  2. 9, 2010 ஆடி 24, விக்ருதி திங்கள் ஆடி அமாவாசை
  3. 24, 2010 ஆவணி 8, விக்ருதி செவ்வாய் ஆவணி அவிட்டம்
  • செப்டம்பர்
  1. 1, 2010 ஆவணி 16, விக்ருதி புதன் கோகுலாஷ்டமி
  2. 11, 2010 ஆவணி 26, விக்ருதி சனி ஸ்ரீ விநாயகர் சதூர்த்தி
  • அக்டோபர்
  1. 7, 2010 புரட்டாசி 21, விக்ருதி வியாழன் மஹாளய அமாவாசை
  2. 8, 2010 புரட்டாசி 22, விக்ருதி வெள்ளி நவராத்திரி ஆரம்பம்
  3. 16, 2010 புரட்டாசி 30, விக்ருதி சனி சரஸ்வதிபூஜை , ஆயுதபூஜை
  4. 17, 2010 புரட்டாசி 31, விக்ருதி ஞாயிறு விஜயதசமி
  • நவம்பர்
  1. 5,2010 ஐப்பசி 19, விக்ருதி வெள்ளி தீபாவளி
  2. 6,2010 ஐப்பசி 20, விக்ருதி சனி கந்த சஷ்டி ஆரம்பம்
  3. 11,2010 ஐப்பசி 25, விக்ருதி வியாழன் கந்த சஷ்டி
  4. 21,2010 கார்த்திகை 5, விக்ருதி ஞாயிறு திருக்கார்த்திகை , மலைதீபம்
  •  டிசம்பர்
  1. 17, 2010 மார்கழி 2, விக்ருதி வெள்ளி ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

<>சிவராத்திரி <>
ஆலய உற்சவ விபரம்
இல
உபயம்
விலாசம்
உற்சவம்
1ஆறுமுகம் கணபதிப்பிள்ளைவிளான், நீர்வேலி வடக்கு.சித்திரை வருடப் பிறப்பு


மாதாந்த நித்திய பூசை
2பொ.கிருஷ்ணானந்தன்நீர்வேலி வடக்குதைமாதம்
3க.தேவராசாஇராசவீதி, நீர்வேலி மாசிமாதம்
4வே.ச.நல்லைநாதன்அச்செழுபங்குனி மாதம்
5வே.கணேஸ்வரன்நீர்வேலி மேற்குசித்திரைமாதம்
6கா.தர்மலிங்கம்பிள்ளையார் கோவிலடிவைகாசி மாதம்
7சிவபாக்கியம்.மார்க்கண்டுகரந்தன்,நீர்வேலிஆனிமாதம்
8த.ஞானசுந்தரம்கரந்தன், நீர்வேலிஆனிமாதம்
9பொ.கிஷ்ணகுமார்நீர்வேலி வடக்குஆவணிமாதம்
10ஆ.தற்பரானந்தம்விளான்,நீர்வேலிபுரட்டாதி மாதம்
11சு.வேலுப்பிள்ளைகரந்தன், நீர்வேலிஐப்பசி மாதம்
12வீ.நல்லைநாதன்இராசவிதிகார்த்திகைமாதம்
13கோ.தேவராசா நீர்வெலி வடக்குமார்கழிமாதம்
வருடாந்த மகோற்சவம்
14சங்கரப்பிள்ளை நடராசா குடும்பத்தினர்நீர்வேலி வடக்குகொடியேற்றம்
15சி.மாணிக்கவாசகர்நீாவேலி வடக்கு2ம் திருவிழா
16பொ.சி.மகேந்திரன்இராசவீதி நீர்வேலி3ம் திருவிழா
17மானிக்கம் நடராசாகரந்தன்வீதி நீர்வேலி4ம் திருவிழா பகல்
கணபதிப்பிள்ளை அரசகேசரிநீர்வேலி தெற்கு4ம் திருவிழா இரவு
பெ.கந்தப்பிள்ளை குடும்பம்நீர்வெலி தெற்கு4ம் திருவிழா இரவு
18க.ஆறுமுகம்நீர்வெலி தெற்கு5ம் திருவிழா பகல்
சி.லோகநாதன்நீர்வேலி மேற்கு5ம் திருவிழா பகல்
சிவசம்பு பூதத்தம்பிநீா்வேலி வடக்கு5ம் திருவிழா இரவு
19வேலுப்பிள்ளை சபாபதி குடும்பம்நீர்வேலி வடக்கு6ம் திருவிழா
20பொ.தியாகராசாநீர்வேலி மத்தி7ம் திருவிழா
21கந்தையா மகாலிங்கம்
நீர்வேலி தெற்கு

8ம் திருவிழா

வேட்டைத்திருவிழா
அப்புப்பிள்ளை சிவபாதம்

பொன்னுத்துரை கனகரத்தினம்

திரு.சிதம்பரநாதன் வல்லிபுரம் குடும்பத்தினர்

22கந்தையா சுகுமாரன்நீாவேலி வடக்கு9ம் திருவிழா  பகல்
செல்வி. புவனேஸ்வரி அம்பிகை பாகன்நீர்வேலி மத்தி9ம் திருவிழா இரவு
23கணபதிப்பிள்ளை தாமோதிரம்பிள்ளைநீர்வேலி மத்திதேர்த்திருவிழா
24சி.மணியம்கரந்தன் வீதிதோ் அன்னப்பாவாடை
செ.சிவலிங்கம்நீர்வேலி
25இ.மகாதேவன்நீர்வெலி மத்திதீர்த்தத் திருவிழா
26சி.க.கணபதிப்பிள்ளை, கந்தசாமி கிருபாகரனும் அன்பர்களும்நீர்வேலிபூங்காவனம்
சதுர்த்தி உபயம்
27வே.சின்னத்தம்பி குடும்பத்தினர்கரந்தன் வீதி, நீர்வேலிதை மாதம்
28திருமதி இராசராசேஸ்வரி அம்மா கனக சபாபதிநீர்வேலிமாசி மாதம்
29சின்னத்தம்பி விநாயக கமூர்த்திநீர்வேலி வடக்குபங்கனி மாதம்
30ஜெனகரத்தினம்அரசரத்தினம்நீர்வேலி வடக்குசித்திரை மாதம்
31சி.செல்வராசாஇராசவீதிவைகாசி மாதம்
32நா.துரைசிங்கம்நீர்வேலி தெற்குஆனி மாதம்
33வீ.பரமேஸ்வரிநீர்வேலிஆடி மாதம்
34அருனையா சுப்பிரமணியம்நீர்வேலிஆவனி மாதம்
35-----------------------------------------------------புரட்டாதி மாதம்
36க.வினாயக சுந்தரம்நீர்வேலிஐப்பசி மாதம்
37சிதம்பரப்பிள்ளை கௌரிசங்கரும்  உமாசங்கரும்நீர்வேலி மத்திகார்த்திகை மாதம்
38க.இராசதுரைநீர்வேலி மத்திமார்கழி மாதம்
நவக்கிரக அபிஷேகம் புரட்டாதிச் சனி
39ஆறுமுகம் சிவபாக்கியம்கரந்தன் சந்தி நீா்வேலி1ம் கிழமை
40இ.முருகையன்நீா்வேலி2ம் கிழமை
41ச.பூரணானந்தசிவம்நீர்வேலி3ம் கிழமை
42கா.சாம்பசதாசிவக்குருக்கள்
4ம் கிழமை
43மாணிக்கம் நடராசாகரந்தன் வீதி5ம் கிழமை
1த.சிவசுப்பிரமணியம்நீர்வேலி மத்தி
2ந.சிதம்பரப்பிள்ளைநீர்வேலி
திருக்கார்த்திகை
1நா.இராசசிங்கம் குடும்பத்தினர்கெராளிவத்தை ஒழுங்கை நீா்வேலி
திருக்கார்த்திகை தீப உற்சவம்
1க.அரசகேசரிநீர்வேலி
ஆணி உத்தரம்
1அ.பக்தவற்சலம்நீர்வேலி வடக்கு
ஆவணி மூலம்
1அ.அரசகுமார்நீர்வேலி தெற்கு
மணவாளக் கோல விழா
1க.கிருபாகரன்நீர்வேலி
பிள்ளையார் கதை உற்சவம்
1க.சு.பரமநாதன்பத்தாவத்தை, நீர்வேலி1ம் நாள்
2வ.க.செல்வநாயகம்கரந்தன் வீதி, நீர்வேலி2ம் நாள்
3ச.கணேசுஇராசவீதி, நீர்வேலி3ம் நாள்
4அ.கந்தசாமிநீர்வேலி4ம் நாள்
5பூ.கதிரேசு சுப்பிரமணியம்நீர்வேலி5ம் நாள்
6முருகேசு இரத்தினம்நீர்வேலி வடக்கு6ம் நாள்
7த.சிவசுப்பிரமணியம்நீர்வேலி மத்தி 7ம் நாள்
8சி.சிவசுப்பிரமணியம்நீர்வேலி8ம் நாள்
9க.கிருபாகரன் நீர்வேலி9ம் நாள்
10பரமநாதன் நவமணிநீர்வேலி வடக்கு10ம் நாள்
11பொ.தியாகராசாநீர்வேலி மத்தி11ம் நாள்
12வி.சிவஞானசந்தரம்நீர்வேலி வடக்கு12ம் நாள்
13ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்நீர்வேலி13ம் நாள்
14பூதத்தம்பி மருந்தவநாதன்இராசவீதி நீர்வேலி14ம் நாள்
15செல்வி.புவனேஸ்வரி அம்பிகைகாகன்நீர்வேலி மத்தி15ம் நாள்
16இராமலிங்கம் சௌந்தரராஜன்
நீர்வேலி வடக்கு

16ம் நாள்
இராமலிங்கம் தேவராஜா
17பூ.கதிரவேலுநீர்வேலி தெற்கு17ம் நாள்
18க.திருநாவுக்கரசுநீர்வேலி வடக்கு18ம் நாள்
19கா.சாம்பசதாசிவக் குருக்கள்நீர்வேலி19ம் நாள்
20இ.சந்திரசேகரம்
நீர்வேலி

20ம் நாள்
சி.சோதிலிங்கம்
ச.பூரணானந்தசிவம்
21நா.துரைசிங்கம்நீர்வேலி21ம் நாள்
திருவெம்பாவை உற்சவம்
1இ.தியாகராஜாநீர்வேலி மத்தி1ம் பூசை
2தம்பு நமசிவாயம் குடும்பம்அகிலேசர் வளவு, நீர்வேலி2ம் பூசை
3பொ.சி.மகேந்திரன்நீர்வேலி வடக்கு3ம் பூசை
4ம..க.நடராசாநீர்வேலி மத்தி4ம் பூசை
5இ.அ.சுப்பிரமணியம்நீர்வேலி வடக்கு5ம் பூசை
6க.கிருபாகரன்நீர்வேலி6ம் பூசை
7க.சுகுமாரன்நீர்வேலி வடக்கு7ம் பூசை
8பொன்னம்பலம் சண்முகநாதன்கொக்குவில்8ம் பூசை
9பொ.கனகரத்தினம்
நீர்வேலி தெற்கு

9ம் பூசை
க.மகாலிங்கம்
அ.சிவபாக்கியம்
10நா.சி.வைத்தியநாதன்நீர்வேலி மத்தி
10ம் பூசை
சோ.வித்துவசிங்கம்நீர்வேலி மத்தி
சோ.ஞானப்பிரகாசம்குடும்பத்தினர்மூளாய்

ஆசிச் செய்திகள்


நல்லாசிகள்
எல்லாம் வல்ல அரசகேசரிப் பிள்ளையார் துணை நிற்க. எமது மெருமான் பெயரில் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சரித்திரப்புகழ் பெற்ற எமது பிள்ளையாரின் பெருமை உலகம் பூராகவும் பரவும் போது எம்பெருமான் திருவருள் ஆன்ம கோடிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எமது நல்லாசிகள் உரித்தாகட்டும். உலகம் போற்ற http://www.neervelyarasakesarippillayar.com/ இத்தளம் விளங்கட்டும். நல்வாழ்த்துக்களும் இறையருளும் பெற்று விளங்கட்டும்.
நன்றி
சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்கள்,

ஸ்ரீஅரசகேசரிப்பிள்ளையார் கோயில் (பிரதமகுரு)

நீர்வேலி
இணையம் வழியே அரசகேசரியான் புகழ் பரவட்டும்.
இன்றைய தகவற் தொழிநுட்ப உலகிற்கு ஏற்ப நமது சமய ஸ்தாபனங்களையும் வளார்த்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் ‘அரககேசரி‘ மாமந்திரி அவர்களால் கி.பி 16ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட் வரலாற்று சிறப்புடைய அரசகேசரி வினாயகர் ஆலயத்திற்கு ஓர் இணையத்தளம் உருவாக்கப்படுவதை அறிந்து மகிழ்கிறோம்.

‘www.neervelyarasakesarippillayar.com‘ என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த இணையத்தளம் மேற்படி ஆலயம் சார்ந்த செய்திகளை உலகெங்கும் வாழும் எம் பெருமானின் அடியார்களுக்கு ஆலயச்செய்திகளை, படங்களை உடனுக்குடன் தந்து அவர்களின் பக்தி வளர உதவும் என நம்புகிறோம்.

மேற்படி இணையத்தை உருவாக்ளி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு நம் அன்பு ஆசீர்வாதங்களையும் வாழ்து்க்களையும் தெருவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

தொடர்ந்தும் மேற்படி இணையக்குழுமத்தார் நம்மூருக்கு, நமது அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்திற்கு மிக்க பெருமையுன்டாகும் வண்ணம் உலகளாவிய வலைப்பின்னலூடாக நற்காரியங்கள் செய்யவும் அவற்றுக்கு எவ்வித இடையூறும் இன்றி நல்லபடி முழுமை பெறவும் விநாயகப் பெருமான் பாதம் பணிந்து ஆசிகளும் வாழ்த்துக்களும் வழங்கி மகிழ்கிறோம்.

இவ்வண்ணம்

சிவஸ்ரீ கு.தியாசராசக்குருக்கள்

செல்லக்கதிர்காமகோவில்

(பிரதமகுரு)

நீர்வேலி.



இணையத்திற்கு ஆலய பரிபாலன சபைப் பொருளாளராகிய எனது ஆசியுரை
நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையாலும் வேறு காரணங்க்களாலும் எமது விநாயக அடியார்கள் கடல் கடந்து பல்வேறு நாடுகளில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்ஙனம் அவர்கள் வேஏற்று நாடுகளுக்குச் செல்லும் போதும் அங்கு வாழ்ந்து வரும் போழுதும தமது குல தெய்வமாகிய நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரை தம்மனத்திரையிலிருத்தி வளிபாடு செய்து நிறைவாக வாழ்வது புலம் பெயர் நாட்டிலிருந்து இங்கு வரும் அடியார்கள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

        எனவே இத்தகைய சிந்தனையோடு வாழ்பவருக்கு இணையம் வழியே எம்பெருமானின் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் சிறப்புக்களையும் ஆலையத்தின் புதுத் தோற்றத்தையும் உடனுக்குடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் அவர்கள் தாம் நேரில் ஆலயத்திற்கு வந்து தரிசித்தது போன்று பக்தி பரவசத்தில் மூழ்கி இன்புறுவார்கள். அத்துடன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்பார்கள்..

        ஆகவே மேற்படி இணையத்தை www.neervelyarasakesarippillayar.com என்ற பெயடில் இணையத்தை உருவாக்கி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு எஙகளுடைய ஆசீர்வாதத்தை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற ஆனந்தமடைகிறோம்.

                                                இங்கனம்
   ச.க.முருகையன்
பொருளாளர்
நீர்வேலி அரசகேரிப் பிள்ளையார்
நீர்வேலி.





Tuesday, November 10, 2009

சில முக்கியமான கட்டுமானங்கள்

நீர்வேலி அரசகேசரி ஆலயமானது பத்தர்களின் நன்கொடைகளாலும் விடாமுயற்சியாலும் பலவிதமான கட்டுமான பணிகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறது. இவற்றிலே சில முக்கியமான கட்டுமானங்களை குறிப்பிட முடியும்.

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.






ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி




  1. ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ

பிள்ளையாரின் வாகனம்

முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்டகயாசுரன்என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார்.

பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே என்னை வெல்ல முடியும் மற்றவர்களை நான் வெல்லக் கடவேனாக
ஆதன் பின் கயாசுரன் தான் சென்ற இடத்திலெல்லாம் பயத்தை ஏற்படுத்தியதோடல்லாமல் அளவிடற்கரிய நாசத்தையும் விளைவித்தான். தேவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘பகவானோ காத்தருளுங்கள். கயாசுரனின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. பெரும் நாசத்தை விளைவிக்கிறான’;.
‘ஆவன் சிவனிடம் வரம் பெற்றுள்ளதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் அவனைப் போல யானை முகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றுள்ளதால் நீங்கள் புpள்ளையாராகிய கணேசனை அணுகிப்பாருங்கள்’.

கணேசனிடம் சென்று தேவர்கள் முறையிட்டனர். ‘கவலை கொள்ள வேண்டாம். நூன் உங்களுக்கு உதவுகிறேன்.’ யானை முககத்தேனின் தொந்தியையும்;; தொப்பையையும் பார்த்து கயாசுரன் எள்ளி நகையாடினான்.’என்ன என்னுடன் போர் புரிய வந்துள்ளாயா? ‘கயமுகனாகிய கணபதிக்கும் கயாசுரனுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. தேவர்கள் பிரமித்துப் போனார்கள்.

இவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி வேறு வழியில்தான் வெற்றி கொள்ள வேண்டும்’. துன்னுடைய தந்தத்தால் கயாசுரனை கணேசன் தாக்கினான். ‘ஐய்யோ என்னுடைய பலமேல்லாம் போய் விட்டதே’ கயாசுரன் மூஞ்சூறாக மாறி ஓடினான். கணேசன் விடவில்லை மூஞ்சூறின் முதுகைபற்றினான். ’என்னை மன்னித்து விடுங்கள்’என்றான் ‘சரி மனதார தவறை உனர்ந்த உனக்கு மன்னிப்பு உண்டு. இன்று முதல் நீ என் வாகனமாக செயல்படுவாய்.

அறுகம்புல் வளிபாடு

ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’.

தோப்புக்கரணம்.

பாலகன் கனேசனுக்கு திடீரென விஸ்னுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. கனேசன் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டான். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டான் விஸ்ணுவிற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
எப்படி கனேசனிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது அவன் பலசாலியாயிற்றே பகவான் விஸ்ணு சிறிது நேரம் யோசித்தார். கணேசனை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் விஸ்ணு தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்
இதை பார்த்தவுடன் கனேசன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான் உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஸ்ணு அதை எடுத்து கொண்டார்.
ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு கனேசனை வழிபடுகிறோம்.

குட்டிக்கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது.
நாரதமுனிவர் இந்திரனைப் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான்.

விநாயகர் பிறந்த கதை.


உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன.

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

Wednesday, November 04, 2009

பயண வழிகாட்டி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து 10km தூரத்தில் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தை சென்றடைவதற்கான வழிகள்
1. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆலயம் வரை 986 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம்
2. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து நீர்வேலிச் சந்திவரை 750,751,964 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம்

View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map

View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை