எமது ஆலயத்தில் மார்கழிமாதத்தில் நடைபெறும் மற்றுமோர் விசேட வழிபாடாகிய திருவெம்பாவை பூசை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இத்திருவிழாவின் இன்னோரு விசேட நிகழ்வான பஜனைப்பயணம் திரு.சந்திரன் தலைமையிலான பஜனைக்குழுவினர் நமது ஊரில் உள்ள வீதிகளால் பஜனைசெய்து வருவார்கள். கடந்த காலங்களைப்போன்று, அவர்களுக்கு அடியவர்கள் ஊக்கமளிக்கும்வண்ணம் வேண்டப்படுகிறீர்கள்.
திருவெம்பாவை
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.
இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.
இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.
திருவெம்பாவை உற்சவம் | |||
1 | இ.தியாகராஜா | நீர்வேலி மத்தி | 1ம் பூசை |
2 | தம்பு நமசிவாயம் குடும்பம் | அகிலேசர் வளவு, நீர்வேலி | 2ம் பூசை |
3 | பொ.சி.மகேந்திரன் | நீர்வேலி வடக்கு | 3ம் பூசை |
4 | ம..க.நடராசா | நீர்வேலி மத்தி | 4ம் பூசை |
5 | இ.அ.சுப்பிரமணியம் | நீர்வேலி வடக்கு | 5ம் பூசை |
6 | க.கிருபாகரன் | நீர்வேலி | 6ம் பூசை |
7 | க.சுகுமாரன் | நீர்வேலி வடக்கு | 7ம் பூசை |
8 | பொன்னம்பலம் சண்முகநாதன் | கொக்குவில் | 8ம் பூசை |
9 | பொ.கனகரத்தினம் | நீர்வேலி தெற்கு | 9ம் பூசை |
க.மகாலிங்கம் | |||
அ.சிவபாக்கியம் | |||
10 | நா.சி.வைத்தியநாதன் | நீர்வேலி மத்தி | 10ம் பூசை |
சோ.வித்துவசிங்கம் | நீர்வேலி மத்தி | ||
சோ.ஞானப்பிரகாசம்குடும்பத்தினர் | மூளாய் |
மேலதிக திருவெம்பாவை தொடர்பான தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.