Thursday, September 30, 2010

புரட்டாதிச் சனிவிரதம்


"புரட்டாதிச் சனி" என அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 18ம் திகதி (18.09.2010)  முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகளுடன் (செப்ரெம்பர் 25, ஒக்ரோபர் 02, 09, 16) ஐந்து புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.

Monday, September 27, 2010

கோளறு பதிகம்.


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.



நவகிரக தோத்திரம்


சனி காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே!
சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
சனீஸ்வரன் தோத்திரம்:

சனீஸ்வர விரதம்

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. 

கன்னி மாதத்தில் (புரட்டாதி மாதம்) கன்னிகாவிருக்ஷம் வியாபகமாகிய தினம் புரட்டாசி மாத முதற் சனி, இத்தினதில் சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம்.

புரட்டாதிச் சனி

புரட்டாதி மாதச் சனிக்கிழமையை முன்னிட்டு  ஏராளமானவர்கள் கோயிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணை விளக்கு ஏற்றியும் நீல நிறப்பூக்களால் அர்ச்சனை செய்தும் சனிதோஷ நிவர்த்திக்காக விரதமிருந்தும் வழிபாடாற்றி வருவதைக் காணமுடிகிறது. இதனை யொட்டி அரசகேசரி வினாயகப்பெருமான் கோவிலிலும் வளக்கம்போல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

Thursday, September 23, 2010

தீர்த்தோற்ஸவம்



நீர்வை அரசகேசரிப் பெருமானின் தீர்த்தோத்ஸவம் இன்று மதியம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

'ஆர்த்த பிறவித் துயர் கெட
 ஆர்த்தாடுத்தாடும் தீர்த்தன்'

 என்று திருவாசகம் பேசும் சிவபெருமானின் திருக்குமாரர்களான முருகனும் விநாயகரும் தீர்த்தக் க்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த வாரி கண்டருளினர். தொடர்ந்து மஹா யாகதரிஸனம், ஹாபூர் ணாஹதி, யாககும்பாபிஷேகமும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ்விழா பிற்பகல் 2.30மணி யளவில் அன்னதானத்துடன் நிறைவு பெற்றது.


Wednesday, September 22, 2010

அழகு இரதமேறி வந்தான்'

அழகு இரதமேறி வந்தான், அருட்காட்சி தந்து நின்றான்.!
அரசகேசரிப்பிள்ளையாரின் தேர்த்திருவிழாவான இன்று பஞ்சமுக வினாயகர் தம்பி முருகப்பெருமான் சமேதரராக காலை ஆறு மணிக்கு வசந்தமண்டபப் பூசையுடன் ஆரம்பித்து ஈழத்தின் தலை சிறந்த தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களின் இசை மழை பொழிய கற்பூர தீபாராதனையுடனும், சாம்பிராணி வாசனை அடியவரின் உள்ளத்துட்புகுந்து பக்திப்பரவசமூட்ட, கொடி, குடை ஆலவட்டம் மற்றும் தீப்பந்தங்கள் அணிவகுக்க ஓதுவார், தேவார, திருவாசக, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் முதலான பஞ்சபுராண பாரணங்களை ஓத மற்றும் பல அடியார்களின் அங்கப்பிரதட்டை பின்தொடர அந்தணச்சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓத உள்வீதி வலம் வந்து நீர்வைமண்ணிலே கிடைக்கப்பெற்ற அனைத்துப் பூக்களாலும் பூமழை சொரிய சூரிய பகவான் தனது வெங்கதிர்களை அடக்கி இயற்கை கூட தேரோட்டம் சிறக்க ஆசீர்வாதம் புரிய வெளிவீதியிலிறங்கிய பெருமான் சரியாக எட்டு முப்பது மணிக்கு அழகிய சித்திரத்தேரிலேறி அழித்தல் தொழிலுக்கு ஆயத்தமானார்.

Tuesday, September 21, 2010

ஒப்பற்ற அழகுறை சப்பறப்பவனியிலே..!


அரசகேசரியானின் மகோற்சவத் திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவான இன்று ஆனைமுகனும், ஆறுமுகனும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டுச்சப்பறத்திலே மின்குமிழ்களின் வர்ண ஒளிவெள்ளத்துள் வீதியுலாவந்து அடியவர்களிற்கு அருட்காட்சி தருகின்ற கண்கொள்ளாக்காட்சி..


Monday, September 20, 2010

புரவியேறிப்புறப்பட்ட பார்வதி மைந்தர்கள்

                                         விக்கினங்கள் களைய புரவியேறிப்புறப்பட்ட பார்வதி மைந்தர்களின் வேட்டைக்கோலம்.

அரசகேசரியானின் எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவிற்கென சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வினாயகனும் தம்பி முருகப்பெருமானும் சிவப்பு வர்ணம் பூசப்பெற்ற குதிரைகளிலேறி அடியவர்களின் பாவங்களையும் அவர்களைப் பீடித்துள்ள தீங்குகளையும் வேட்டையாட விளைந்த அருட்கோலம்...! 


Sunday, September 19, 2010

ஏழாந்திருவிழாவில்!

எருதேறி எழில்பொங்க ஏழாந்திருவிழாவில் அண்ணனும் தம்பியும்.




ஆறாந்திருவிழாவில் அரசகேசரியான்..

ஆறாந்திருவிழாவில் ஆறுமுகன் சமேதரராக அருள்பாலிக்கும் அரசகேசரியான்..

ஐந்தாம் நாளில் அருட்கோலம்..

ஐந்தாம் நாளில் அரசகேசரியானின் அருட்கோலம்..

Thursday, September 16, 2010

பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா

நீர்வேலி அரசகேசரித்தலத்தில் எழுந்தருளியுள்ள பாலாம்பிகை உடனாய
வைத்தியநாதப்பெருமான் ஆவணி மூலநாளாகிய இன்று மதியம்





4ம்திருவிழாக் கோலாகலம்

4ம்திருவிழாக் கோலாகலம்- விசேட தவில் இன்னிசைக்கச்சேரி
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயிலில் இன்று காலை 4ம்திருவிழாக்
கோலாகலமாக விசேட தவில் இன்னிசைக்கச்சேரியுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாள்

நீர்வை அரசகேசரிப்பெருமானின் மஹோத்ஸவ மூன்றாம் நாளாகிய நேற்றைய தினம் இரவு பிள்ளையார் யானைவாகனத்திலும் குமரன் இடபவாகனத்திலும் காட்சி தந்ததை இங்கு காணலாம். மங்கல வாத்திய கோஷ்டியினருள் சிலர் இசையாராதனை செய்வதும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தகவல்- 
தி.மயூரசர்மா

நீர்வையூர் மக்கள் கொண்டாட்டம்

அரசகேசரி விநாயகப்பெருமானுக்கு நேற்று மதியம் தொடக்கம் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் நேற்று மாலை நவசந்தி ஆவாஹனம் இடம்பெற்றது. விநாயகர் மூஷிக வாகனத்திலும் முருகன் மயில் வாகனத்திலும் பவனி வந்து அருட்காட்சி வழங்கினர். இன்றைய தினமும் காலை உத்ஸவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

Wednesday, September 15, 2010

கொடி ஏற்றத்திருவிழா

அரச கேசரிப்பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இம்மாதம் 13ஆந் திகதி திரு.சோமதேவக்குருக்கள் தலைமையில் யாழ் நகரின் புகழ்பூத்த அந்தணச்சிவாச்சாரியார்கள் பிரசன்னத்தில் வேதாகம முறைப்படி மிகவும் பக்திபூர்வமாக பலநூறு அடியாரகளின் அரோகரா ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் மதியம் மற்றும் இரவுப் பூஜைகளிடம்பெற்று 21ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 22ஆம் திகதி பூரணை தினத்தன்று தீர்த்தத்திருவிழாவும் மாலை கொடியிறக்கத்திருவிழாவுடன் மகோற்வ்சவம் இனிதே நிறைவுறும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை