Friday, August 27, 2010

மஹாகணபதி ஹோமம்


நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அரசகேசரி விநாயகர் திருக்கோயிலில் எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை காலை 7மணி தொட்டு மஹாகணபதி ஹோம வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் விநாயகசதுர்த்திக்கு முந்தைய ‘மஹாசங்கடஹர சதுர்த்தி’ நன்நாளில் இந்த ஹோமம் வருடாந்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இந்த வகையில் இவ்வாண்டும் செப்டம்பர் 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள வருடாந்த மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக இந்த ஹோம வைபவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Friday, August 20, 2010

மகோற்சவத்தை ஒட்டிய ஆயத்தங்கள்.

அடுத்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய வெளிமண்டபச் சுவர்கள், யன்னல் கம்பிகள் மற்றும் வாயில் அடைப்பு (கேற்) என்பவற்றிற்குத் தீந்தை (பெயின்ற்) பூசப்பட்டு வருகின்றது. இதே நேரம் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் வகையில் ஆலயக் குருக்கள் தேவர் ஐயாவின் மகன் ஜெயன் ஐயாவின் முயற்சியில் நூல் ஒன்றும் தொகுக்கப்பட்டு வருகின்றது. 

Sunday, August 15, 2010

ஆலயச்சிறப்புமிக்க நீர்வேலி

ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது.

Friday, August 13, 2010

சங்காபிஷேக விழா.

நீர்வை அரசகேசரித் தல வைத்தீஸ்வரப் பெருமானுக்கு
சங்காபிஷேக விழா.


நீர்வேலி அரசகேசரித் திருத்தலம் மூன்று கருவறைகளை (மூலஸ்தானங்களை) உடையது. ஓன்று பிள்ளையாருக்குரியது. இப்பெயரிலேயே ஆலயமும் அழைக்கப்படுகின்றது. மற்றைய முக்கிய மூலஸ்தானம் வைத்தீஸ்வரப் பெருமானுக்குரியது. வைத்திய நாதன் என்ற திருநாமத்துடன் சிவப்பரம்பொருள் இலிங்க வடிவில் இங்கு காட்சி தருகிறார்.
 


Wednesday, August 11, 2010

வரலட்சுமி விரதம் என்றால் என்ன?

 தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் நாளைவரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

வரலட்சுமி விரதம்

அறிவித்தல்
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுட்டிக்கப்படவிருக்கிறது. நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் விரதம் அனுட்டிக்கவிரும்புவோர் ரூபா 200 செலுத்தி பெட்டிக் காப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 15.08.2010 இற்கு முன்னர் ஆலய குருக்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

Sunday, August 08, 2010

NEERVELY ARASAKESARI TEMPLE


Neervely Arasakesari Temple is situated about North of 8 k.m post on the Jaffna- point pedro road. The temple must has been built by “Arasakesari”. The minister of Jaffna kingdom.

Pararajasekaran is a main king of Jaffna kingdom. (1478-1519). He was a successful king of Jaffna. (kingdom- Nallur) The Pararajasekar king’s Brother Segarajasekaran.  Arasakesari a Nephew of the king was an Sanskrit scholar who translated  “kaviraj” Kalidasa’s sanskrit classic entitled “Raguvamsam” in to tamil.

Wednesday, August 04, 2010

சமய மெய்நெறி நோக்கிய ஒரு பார்வை

கிறிஸ்தவம் என்பது இது அல்லவா?

 இன்றைக்கு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு மதப்பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் இந்து மதத்தினைப் பற்றி பலவாறான அவதூறுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்துமத்தில் உள்ள பல்வேறு கிரியை மரபுகளை தவறானது என்றும் மூடத்தனமானது என்றும் கூறி தமது வழிபாட்டுமறைமையே மேன்மை மிக்கது என்று பட்டி தொட்டி எங்கும் பிரசங்கித்து வருகின்றார்கள். தெற்காசிய தேசமெங்கும் இந்துக்களைக் குறிவைத்து மதப்பிரச்சாரம் செய்து வருவதைத் தவிர மேற்குலக நாடுகளில் சென்று வாழும் இந்துக்களின் வீடுகள் தேடி வந்தம் இவர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Sunday, August 01, 2010

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

அரசகேசரிப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ்


1. விநாயகர் துதி

ஒற்றைக் கொம்பும் செந்நிற மேனியும்
 ஒளிரும் யானைத்திருமுகமும் பாசாங்குசமும்
வற்றாக் கருணைவளர் சிற்றடிகளும்
 வரதகரமும் உடைய நின்னை வாழ்த்தும்
நற்றமிழ் பிள்ளைக் கவி தழைத்தே
 நலமுற விளங்கிடவே கஜமுகனைச்
செற்றவனே நீர்வை அரசகேசரியாய்
 செம்மை வரந்தந்து காத்திடுவாயே

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை