Sunday, December 13, 2009

விநாயகர் விரதம்

க்கள் சாந்த வழிபாடு செய்வதில் விரதங்களும் ஒன்றாகும். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க முடைமையால் ஆன்ம உய்தி பெறலாம். 
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது.




“வின்னாமம் புகல்கின்ற மக்கமதி ஆறாம் பக்கம்”என்பதால் அறியலாம் (வில் - தனுர்மாசமான மார்கழி) யாழ்ப்பாணத்தில் இருபத்தொருநாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர் பலர் இன்றுமுளர். ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நு}ல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். 

பிள்ளையார் கதையை அன்புடன் இவ்விரத நன்னாட்களில் படிப்பது புண்ணிய மாகும். பகை நோய்கள் நீங்க, வென்றி, எடுத்த காரிய சித்தி, திடகாத்திரம் முதலிய சிறப்புக்கள் உண்டாகும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை