Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன.

மனிதனுங்கூட உணர்வுகளால் கட்டுண்டு பலவற்றை செய்ய எத்தனிக்கும் போது, எதிர்காலச்சிந்தனை அல்லது மனச்சாட்சி சிலவற்ருக்கு தடை போடுகிறது. இதனையும் உணரமுடியாதவனுக்கு அல்லது மிக நன்றாக உணர்ந்தவனால் வகுக்கபட்ட எழுதாச்சட்டமே மதமாகும். இதுவே பின்னர் இக்கொள்கை கோட்பாட்டை நன்குபுரிந்தவர்களும், பயன் பெற்றவர்களும் அக்கொள்கைகளை தமது சந்ததிகளுக்கு கொண்டுசெல்ல பலவற்றைசெய்தார்கள். இதன் திரிபு அல்லது பெறுபேறுகளே இன்றைய மதங்களாகும்.எங்குமே பிறக்கின்ற உயிர்களுக்கு சில தங்கவைத்தல்களும், நம்பிக்கைகளும் ஊட்டப்படுவதனால் அவற்றுள் ஒரு தேசியம் உருவாக்கி வளர்க்கப்படுகிறது. இந்தத்தேசியம் அவனுக்கு அவன் சார்ந்தவற்றின் உறுதிப்பாட்டையும் பற்றையும் தானாகவே வளர்த்து விடுகிறது. பின் சுயனலமென்பதையும் தாண்டி அர்ப்பணிப்பு என்கின்றவரைக்கும் அவனை உளைக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.இங்கேயும் தனது சுற்றத்தின் இருப்பிலும் எழுகையிலும் ஆதங்கங் கொண்ட உறவுகள் நிறையச்சாதிக்க வேண்டுமென்ற நம்பிக்கயுடன், சுயனலந்தாண்டிய ஒருபாதையின் பயணத்தில் மீண்டும் அதே உறவுகளின் உரத்திலும் உறுதியான கைகோர்ப்பிலும் நாமெல்லம் ஒன்றுபட்டு நம்புகின்ற மதத்தின் பெயரிலும், அது தருகின்ற அளவுக்கு அல்லது அதிலும் மேலான தூய்மையான ஆத்ம திருப்ப்தியினை நோகாகக் கொண்டு புறப்பட்டிருக்கிறது.புலத்தில் ஒருகூட்டினுள்ளும் புலத்துக்கு வெளியே அண்டமெங்கும் சிதறியுள்ள நாமெல்லோரும் நமக்காக – நம் மண்ணுக்காக ஏதோசெய்வதற்கான களத்தில் சந்திக்கிறோம். அனைவரதும் ஆலோசனைகளையும் அன்பளிப்புகளையும் எதிர்பார்த்து இங்கே ஒரு பிள்ளையார் சுளி இடப்படுகிறது.

எழுத்து,
வி.பராபரன் (ஐக்கிய அரபு இராட்சியம்)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை