Tuesday, November 10, 2009

பிள்ளையாரின் வாகனம்

முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்டகயாசுரன்என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார்.

பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே என்னை வெல்ல முடியும் மற்றவர்களை நான் வெல்லக் கடவேனாக
ஆதன் பின் கயாசுரன் தான் சென்ற இடத்திலெல்லாம் பயத்தை ஏற்படுத்தியதோடல்லாமல் அளவிடற்கரிய நாசத்தையும் விளைவித்தான். தேவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘பகவானோ காத்தருளுங்கள். கயாசுரனின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. பெரும் நாசத்தை விளைவிக்கிறான’;.
‘ஆவன் சிவனிடம் வரம் பெற்றுள்ளதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் அவனைப் போல யானை முகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றுள்ளதால் நீங்கள் புpள்ளையாராகிய கணேசனை அணுகிப்பாருங்கள்’.

கணேசனிடம் சென்று தேவர்கள் முறையிட்டனர். ‘கவலை கொள்ள வேண்டாம். நூன் உங்களுக்கு உதவுகிறேன்.’ யானை முககத்தேனின் தொந்தியையும்;; தொப்பையையும் பார்த்து கயாசுரன் எள்ளி நகையாடினான்.’என்ன என்னுடன் போர் புரிய வந்துள்ளாயா? ‘கயமுகனாகிய கணபதிக்கும் கயாசுரனுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. தேவர்கள் பிரமித்துப் போனார்கள்.

இவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி வேறு வழியில்தான் வெற்றி கொள்ள வேண்டும்’. துன்னுடைய தந்தத்தால் கயாசுரனை கணேசன் தாக்கினான். ‘ஐய்யோ என்னுடைய பலமேல்லாம் போய் விட்டதே’ கயாசுரன் மூஞ்சூறாக மாறி ஓடினான். கணேசன் விடவில்லை மூஞ்சூறின் முதுகைபற்றினான். ’என்னை மன்னித்து விடுங்கள்’என்றான் ‘சரி மனதார தவறை உனர்ந்த உனக்கு மன்னிப்பு உண்டு. இன்று முதல் நீ என் வாகனமாக செயல்படுவாய்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை