ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலையின் பத்தாவது அகவை நிறைவு விழாவும் பரிசில் நாளும்
நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பான ஆன்மீகக் கல்வி அளித்து வரும் நிறுவனம் ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை.
இப்பாடசாலையின் இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 13.03.2011 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது.
இவ்வறநெறிப் பாடசாலையின் முதல்வர் சிவஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள் தலைமையில் நிகழவுள்ள இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக, நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி முதல்வரும், நீர்வேலி கலை பண்பாட்டுப் பேரவையின் தலைவருமாகிய இ.குணநாதன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், இந்துக் கலாசாரத் திணைக்கள அபிவிருத்தி உதவியாளர் மகிந்தினி விஜயகுமார், நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் சு.சண்முகவடிவேல், ஸ்ரீ கணேசா சனசமூக நிலைய தலைவர் க.முருகையா ஆகியோர் கலந்து கொள்வர்.
மேலும் கௌரவ விருந்தினர்களாக, பிள்ளையார் கோயில் பரிபாலன சபைத் தலைவர் இ.தியாகராஜா, யாழ்.மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி ந.சிவசீலன், அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் ச.வேலழகன், றோ.க.த.க பாடசாலை அதிபர் சி.தர்மரத்தினம், சீ.சீ.தக. பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இந்நிகழ்விற்கு வரவேற்புரையை க.ந.ஜெயகிருஷ்ணனும் ஆசியுரையை சிவஸ்ரீ .சா.சோமதேவக்குருக்களும் வழங்குகின்றனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பலவும் நிகழவுள்ள இந்நிகழ்வில் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களான செல்வி.செ.சிவாஜினி, செல்வி.த.தர்சிகா, செல்வி ப.வேழினி ஆகியோரின் பிரதிபலன் கருதாத சேவையும் கௌரவிக்கப்பெறவுள்ளது.
தகவல்- ஜெ.செந்தூரன்/ தகவல்- தி.மயூரகிரி