Monday, March 14, 2011

கும்பாபிசேக விஞ்ஞாபனப் பத்திரிகை




நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் கும்பாபிசேக விஞ்ஞாபனப் பத்திரிகை வெளியிடப்பட்டது. எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமையன்று நீர்வேலி அரசகேசரி விநாயகருக்கும் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமிக்கும் கும்பாபிசேகம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விஞ்ஞாபனம் ஒன்றைப் பரிபாலன சபையினர் வெளியிடப்பட்டுள்ளது.

















Saturday, March 12, 2011

ஆலயத்திருப்பணிகள்

எமது ஆலயத்திருப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எமது ஆலயத்திருப்பணியில் கிராம மக்களாக முன்வந்து சில வேலைகளை செய்துகொண்டுவருகிறார்கள் இன்னும் பலவேலைகள் எவராலும் பொறுப்பெடுக்கப்படாமல் உள்ளது. இவ்வேலையினை செய்வதற்கு எம்மிடம் போதியளவு நிதியில்லாமலுள்ளது இதற்கானநிதியினை விரும்பியவர்கள் யாவரும் உதவிசெய்யமுடியும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகளில் பங்கெடுத்துள்ளவர்கள் விபரம்அறிய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பை மேற்கொள்ளவும்.

அகவை 10 இல் ஸ்ரீ கணேசா.

ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலையின் பத்தாவது அகவை நிறைவு விழாவும் பரிசில் நாளும்

நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பான ஆன்மீகக் கல்வி அளித்து வரும் நிறுவனம் ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை.

இப்பாடசாலையின் இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 13.03.2011 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது.

மஹாகும்பாபிஷேகப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் தமிழில் இரகுவம்சம் செய்த அரசகேசரி மஹாமந்திரியால் வணங்கப்பெற்று ‘செம் பாட்டுப் பிள்ளையார்’ என்று போற்றப்பெறுவதுமாகிய திருத்தலம் நீர்வை அரசகேசரி ஆலயம். விநாயகப் பெருமானும் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரரும் மூலவர்களாக எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலில் அண்மையில் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவிலில் திருப்பணி

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலுக்குப் பணம் அனுப்புவதற்கான சரியான கணக்கிலத்தைப் பரிபாலன சபையினர் வழங்கியுள்ளனர்.



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை