Thursday, April 22, 2010

நீர்வேலிக்குப் பெருமை


இரகு வம்சத்தையும் தேடிப் பதிப்பிப்பது நீர்வேலிக்குப் பெருமை
      இரகுவம்சம் கடினமான தமிழில் ஆக்கப்பட்டது. எங்கோ ஒரு சில நூலகங்களில் இருப்பதாகத் தகவல். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ கணேசையர் 50 ஆண்டுகளுக்கு முன் பொருளோடு பதிப்பித்ததாகவும் வாசித்திருக்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கோயிலில் நடந்த விழாவில் ; நீர்வை முருகையன் “ அரசகேசரி இங்கிருந்து தான் இரகுவம்சம் எழுதியிருக்க வேண்டும். எனவே இது பற்றி ஆய்வு நிகழவேண்டும். இதனால் தான் செம்- பாட்டு பிள்ளையார் ( செம்மையான நல்ல பாட்டுக்கள் எழுந்த இடம்) என்று ஆகியிருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தமையும் ஞாபகமிருக்கிறது.

சிலை அமைப்பது சிறப்பு


அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைப்பது சிறப்பு

            15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவனும் தமிழில் “இரகுவம்சம்” என்ற பெரிய அரிய இன்று எம் கைகளுக்கு அகப்படாத காவியத்தை படைத்தவனும் நீர்வேலியில் அரசகேசரிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டியவனும் யாழ்ப்பாண ராச்சியத்தில் மந்திரிப்பதவி வகித்தவனுமாகிய அரசகேசரிக்கு கோயில் முகப்பில் ஒரு சிலை அமைய வேண்டும் எனப் பெரியோர் விரும்புகின்றனர். சென்ற வாரம் மேற்படி கோயில் தொடர்பாக உதயன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது.

புனிதம் பேணப்பட வேண்டும்


அரசகேசரியான் ஆலயச் சூழலில் புனிதம் பேணப்பட வேண்டும்

               அரசகேசரியான் ஆலயச் சூழலில் புனிதம் பேணப்பட வேண்டும் என்பது எல்லோரினதும் அவா. மண்ணின் மகிமையினை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான சூழமைவை யாவரும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.










தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு


அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு

               அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக கோபுரவாயில் வெளி மண்டபத்திற்கு இரும்புக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பாதுகாப்புக் கருதியும் இரவில் திறந்திருந்த கோபுர மண்டபத்தில் வேண்டாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவுமே இக்கதவு பொருத்தப்பட்டுள்ளது

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

Saturday, April 17, 2010

உரும்பிராயில் ராமகிருஷ்ணமிஷனின் கிளை.

ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று உரும்பிராயில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ராமகிருஷ்ணபரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர், ,தூயஅன்னை சாரதாதேவி ஆகியோரது கொள்கைகளை பரப்புவதையும் ஆன்மீகப்பணியாற்றுவதையும் மக்கள் சேவை செய்வதையும் இலக்காகக் கொண்ட தூயதுறவிகளை தன்னகத்தே கொண்டு பணியாற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள   மாபெரும் ஆன்மீக இயக்கமாகிய ராமகிருஷ்ணமிஷனின் கிளை ஒன்று நீர்வேலிக்கு அருகிலுள்ள உரும்பிராயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உதயன் பத்திரிகையில் ஆலயம் பற்றிய செய்தி.

உதயன் பத்திரிகையில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றிய செய்தி.


உதயன் பத்திரிகையில் இன்று வியாழக்கிழமை (15.04.2010) இடம்பெற்ற வலி.கிழக்கு வலம் பகுதியில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் பற்றி அழகனான கட:டுரை ஒன்று ஞான சூரியன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.      சென்ற புதன்கிழமையும் மேற்படி ஆலயம் தொடர்பான அற்புதத் தகவல்களையும் அரிய செய்திகளையும் உள்ளடக்கி கட்டுரை வந்திருந்தது. அதன் தொடர்ச்சியை இதுவாகும்..
தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி
                                                 

 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை