இது மூலவருடைய மஹாகும்பாபிஷேகம். ஆகவே, மிகப் பரிசுத்தமானது.... தமிழகக் கோயில்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை சாதாரணமாகப் பார்ப்பதற்கே அனுமதிக்கப்படுவதில்லை... எனவே, இதன் புனிதத்துவத்தைக் கருத்தில் கொண்டு இதனை விநாயகர் அடியவர்களின் தனிப்பட்ட பார்வைக்குள் வைத்திருப்பதற்காக....
தி.மயூரகிரி சர...
நீர்வையின் நடுவே எழுச்சி பெற்றிருக்கிற அரசகேசரியின் எழிலுருவம்..
ஏத்துமின்.. போற்றுமின்..
நீர்வை அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயிலில் நேற்று காலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் விநாயகரை நோக்கி அமைக்கப்பட்டுள்ள அரசகேசரியின் திருவுருவத்திற்கும் திருக்குடநன்னீராட்டல் நடந்தது.
நீரூரின் வரலாற்றுச் சிறப்பினை வெளிப்படுத்த வல்ல அற்புத எழிலுருவாக அரசகேசரி இங்கு எழுந்து நிற்கிறார். 16ம் நூற்றாண்டுக்குரியவரான இவர் யாழ்ப்பாண இராச்சிய சக்கரவர்த்தி பரராஜசேகரனின் மருகனும் மஹாமந்திரியுமாவார். இவரே நீர்வேலியில் அரசகேசரியானின் திருத்தலம் உருவாவதற்கு காரணராக விளங்கியவர் என்றும் வரலாறு சான்று பகர்கிறது. அரசனாகவும் விளங்கிய அரசகேசரி மாபெரும் கவிச்சக்கரவர்த்தியாவான். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவனான இவனே ரகுவம்ச மஹாகாவியத்தைத்...
நீர்வை அரசகேசரியானின் கும்பாபிஷேகம், தசதர்சனம், ஆச்சார்ய மரியாதை
இன்று காலை நிகழ்ந்த நீர்வை அரசகேசரி மஹாகணபதியின் மஹாகும்பாபிஷேகக்
காட்சிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன...
மயூ
படங்கள்- பாலகிருஷ்ண சர...