Saturday, May 21, 2011

சிலை அமைக்க முயற்சி

அரசகேசரிக்கு சிலை அமைக்க முயற்சி, அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில்
துரித கதியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்னறன அந்தவகையில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் 12ம் திகதி நடைபெறுவதை ஒட்டி ஆலயத்தில் மிக மும்முரமாக திருப்பணிகள் நடைபெற்று வருவதை எல்லோரும் அறிவோம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் தற்போது புதிய சிலைகளைச் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இது குறித்து ஆலய பரிபாலனசபையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ச.க.முருகையா அவர்கள் குறிப்பிடுகையில், “அன்பர்கள் பலரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆலயத்தை நிறுவிய மகாமந்திரி அரசகேசரிக்கு புருஷோத்தமனால் வரும் நாட்களில் சிலை உருவாக்கப்படவுள்ளது” என்றார். இக்கோயிலின் முகப்பில் யாழ்ப்பாணத்தரசன் பரராஜசேகர சிங்கையாரியனின் தலைமை மந்திரியும் மைத்துனனுமாகிய இவ்வாலய ஸ்தாபகன் அரசகேசரிக்கு (16ம் நூற்றாண்டு) சிலை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து நீர்வேலி இணைய ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமை துலக்கமடையும் எனலாம். இப்பணியில்  ஆலயத்தார்  ஈடுபாடு கொணடிருப்பதையிட்டு மனமகிழ்வடைகிறோம். ஆலயத்தில் வர்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இக்காட்சிகள் சில இங்கு இணைக்கப்பட்டுள்ளன.


தகவல்- தி.மயூரகிரி சர்மா

Friday, May 06, 2011

மகாகும்பாபிஷேகப் பெருவிழா

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் திருக்கோயில் மகாகும்பாபிஷேகப் பெருவிழாப் பத்திரிகை

நீர்வேலியில் அருளொளி வீசும் அற்புதக் கடவுளாகிய அரசகேசரிப் பெருமானுக்கு எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறஉள்ளது. இதற்கான மகாகும்பாபிஷேகப் பத்திரிகை இன்று மாலையில் சோ.வரப்பிரதசர்மா அவர்களின் ஊடாக நமக்குக் கிடைத்துள்ளது.

நீர்வேலியின் மிக உன்னதமான விழாவாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும்
இவ்வாலய மகாகும்பாபிஷேக வைபவத்தை உலகெங்கிலும் வாழும் அன்பர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.. எனவே இ இப்பத்திரிகையை முதன் முதலாக இணையமூடாக வெளிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்..



தகவல்,
தி.மயூரகிரிசர்மா

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை