
பரந்த அறப்பணி நடைபெறும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல்
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச்சூழல் இயல்பாகவே சமூகப்பணி நடைபெறும் சூழமைவுடையதாகவுள்ளது. கி.பி 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் பரம்பரைத் தோன்றலான இரகுவம்ச மகாகாவியத்தைத் தமிழில் படைத்த அரசகேசரி மகாமந்திரியால் ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடையதாக இவ்வாலயமுள்ளது. இப்பழமையும் அருட்சிறப்பும் மிகுந்த இவ்வாலயச் சூழல் இயல்பாகவே தெய்வீகத் தன்மையுடன் சமூகப்பணிகள் நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது. ...